பரபர தேர்தல் களம் | 18 தொகுதிகளில் திமுக Vs பாஜக நேரடி மோதல்.. 5 தொகுதிகளில் சிட்டிங் அமைச்சர்களுடன் மோதும் பாஜக வேட்பாளர்கள்..


தமிழக அரசியலில் அதிமுகவை விட திமுகவை அதிகமாக சிந்தியாதும் விமர்சித்தது வந்த பாஜக தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுடன் பாஜக 18 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. 5 தொகுதிகளில் பாஜக, சிட்டிங் அமைச்சர்களை எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்குகிறது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக இன்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. திமுக மொத்தமுள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 164 சட்டசபை தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி உள்ளது.

திமுக தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், திமுக களமிறங்கும் தொகுதிகள் மற்றும் அதில் போட்டியிடும் 164 வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று முழுவதுமாக திமுக தலைமை வெளியிடப்பட்டது.

இதில், திமுகவும், பாஜகவும் நேரடியாக 18 சட்டசபை தொகுதிகளில் மோதுகிறது. அதிமுக சார்பில் பாஜகவுக்கு 27 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 18 இடங்களில் திமுகவின் வேட்பாளர்களை எதிர்த்து பாஜக வேட்பாளர்களை களமிறக்க வேண்டிய சூழலுக்கு பாஜகவை திமுக தள்ளியிருக்கிறது. பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்று அல்லது நாளை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக – பாஜக நேரடியாக, 1ஆவடி, 2.மயிலாப்பூர், 3.திருவண்ணாமலை, 4.ராசிபுரம் (தனி) 5.கோவை வடக்கு, 6.அவிநாசி (தனி) 7. திருப்பூர் (தெற்கு) 8.திருவாரூர், 9.தஞ்சாவூர், 10.புதுக்கோட்டை, 11,திருப்பத்தூர், 12.மானாமதுரை (தனி), 13.சாத்தூர், 14.ராமநாதபுரம், 15.திருச்செந்தூர், 16.வாசுதேவநல்லூர், 17.ராதாபுரம், 18.நாகர்கோவில் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகளில் திமுக – பாஜக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

    இதில் 5 தொகுதிகளில் பாஜகவினர் சிட்டிங் அமைச்சர்களை பாஜக வேட்பாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர். திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எவ வேலு, திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன், ஆவடியில் அமைச்சர் ஆவடி நாசர், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் மதிவேந்தன் போன்ற வெய்டான அமைச்சர்களை களத்தில் எதிர்கொள்ள போகின்றனர். இவர்களை எதிர்த்து பாஜக வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு வெளியான நிலையில், ”தீயா வேல செய்யனும் கொமாறு” என்று கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர் உடன்பிறப்புகள்..


    banner

    Related posts

    கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

    Ambalam News

    பாலாற்றில் தடுப்பனை அமைக்க இந்திய கம்யூனிஸ் கட்சி தீர்மானம்..

    Ambalam News

    தவெகவின் ”கூடா நட்பு” | முதல்வர் விஜய் மீது தொடங்கிய விவாதம்.. எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து அதிமுகவினர் தவெகவை ஆதரித்ததான் பின்னணி என்ன.?

    Ambalam News

    Leave a Comment