அதிமுக 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! திருச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார்.?


தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களுக்கான 127 பேர் ஆம் கட்ட பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (27.03.2026) வெளியிட்டுள்ளார்.


அறிவிப்பின்படி, ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆர். மனோகரன், திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதியில் க. இராஜசேகரன், திருவெறும்பூர் தொகுதியில் ப. குமார் மற்றும் லால்குடி தொகுதியில் லீமா ரோஸ் மணப்பாறை தொகுதியில் பி.எல். விஜயகுமார் ஆகியோர் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு களம் காண்கின்றனர். முசிறி தொகுதியில் யோகநாதன் மற்றும் துறையூர் (தனி) தொகுதியில் இ. சரோஜா ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.


கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் அம்மன் கே.அர்ச்சுணன் மற்றும் சிங்காநல்லூர் தொகுதியில் கே.ஆர். ஜெயராம் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தொகுதியில் செ. தாமோதரன் மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் களம் காண்கின்றனர். வால்பாறை (தனி) தொகுதியில் டி.லட்சுமண சிங் மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதியில் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.


பழனி தொகுதிக்கு கே. ரவி மனோகரன் மற்றும் ஆத்தூர் (திண்டுக்கல்) தொகுதிக்கு ஏ.விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நிலக்கோட்டை (தனி) தொகுதியில் எஸ். தேன்மொழி மற்றும் வே,சந்தூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் வி.பி.பி. பரமசிவம் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.


அரவக்குறிச்சி தொகுதியில் கே.செல்வக்குமார், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில் எஸ்.திவ்யா மற்றும் குளித்தலை தொகுதியில் எஸ்.கருணாகரன் ஆகியோர் வேட்பாளர்களாகப் நிறுத்தப்பட்டுள்ளனர். பெரம்பலூர் (தனி) தொகுதியில் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் களம் நிறுத்தப்பட்டுள்ளார்.


கடலூர் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் சொரத்தூர் இரா. இராஜேந்திரன், பண்ருட்டி தொகுதியில் மோகன் மற்றும் கடலூர் தொகுதியில் எம்.சி.சம்பத் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். குறிஞ்சிப்பாடி தொகுதியில் அ.புவனேந்திரன், புவனகிரி தொகுதியில் ஆ.அருண்மொழிதேவன் மற்றும் சிதம்பரம் தொகுதியில் கே.ஏ.பாண்டியன் ஆகியோர் அதிமுக சார்பாக களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.


banner

Related posts

தவெக பிரச்சாரம் 39 பேர் பலி ”போலீசார் கடமையிலிருந்து தவறியதே உயிரிழப்புக்கு காரணம்”- எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

Ambalam News

முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி காலமானார்

Ambalam News

எடப்பாடி பழனிச்சாமி – தினகரனை அலறவிடப்போகும் சசிகலாவின் புதுக்கட்சி பிளான்..!?

Ambalam News

Leave a Comment