திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள் | போல் டிராக்கர் (Poll Tracker) கருத்துக் கணிப்பு | 2 மிடத்தில் அதிமுக – 3 வது இடத்தில் தவெக..! வெளியானது பரபரப்பு சர்வே.!


2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெரும் என்று லோக்போல் என்ற அமைப்பு தனது கருத்துக் கணிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது போல் டிராக்கர் (Poll Tracker) கருத்துக்கணிப்பில் திமுக 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் 42.7% ஆக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் பெறக்கூடிய இடங்கள் மற்றும் வாக்கு சதவீத விபரங்களை போல் டிராக்கர் (Poll Tracker) வெளியிட்டுள்ளது. போல் டிராக்கர் கருத்துக்கணிப்பின் படி திமுக கூட்டணி: 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கணித்துள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் 42.7% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அடுத்ததாக, அதிமுக, 46 முதல் 52 இடங்கள் வரை பிடிக்கும் என்று தனது கணிப்பில் தெரிவித்துள்ளது. இவர்களது வாக்கு சதவீதம் 30.3% ஆக இருக்கும் என்று கூறப்பட்டுலது.

அதேபோல, முதன் முறையாக சட்டசபை தேர்தல் களத்தில் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK): 6 முதல் 12 இடங்களைப் பிடிக்கும் என்றும், 19.2% வாக்குகளைப் பெறும் என்றும் தனது கருத்துக் கணிக்கப்பில் தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சி (NTK): 0 முதல் 2 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இவர்களது வாக்கு சதவீதம் 5.1% ஆக இருக்கும். இதர கட்சிகளுக்கு இடங்கள் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை என்றும், 2.8% வாக்குகளைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

போல் டிராக்கர் கருத்துக் கணிப்பின்படி 172 – 178 இடங்கள் என்பது ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. 42.7 சதவீத வாக்கு வங்கி என்பது சாதாரண விஷயமல்ல. எதிர்ப்பலைகளை விட, ”எங்களின் மக்கள் நலத் திட்டங்களே எங்களைக் கரையேற்றும்” ”எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் வெற்றியை தரும்” என்று உற்சாகத்தில் இருக்கும் உடன்பிறப்புகளுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் இந்த கருத்துக் கணிப்பு வெளியாகி இருக்கிறது.

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 46 – 52 இடங்களில் மட்டுமே வந்து நிற்பது ரத்தத்தின் ரத்தங்களுக்குச் சற்று அதிர்ச்சிதான். 30.3 சதவீத வாக்குகள் உறுதியாக இருந்தாலும், அதிமுகவுக்கு வெற்றி வெகுதூரத்தில் இருப்பதை இந்த கருத்துக்கணிப்பு உணர்த்தியுள்ளது. அதிமுக களத்தில் கடுமையாக போராட்ட வேண்டியுள்ளது.

இந்தக் கணிப்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விஷயம், தவெக (TVK) தான். முதல் தேர்தல் காலத்திலேயே 19.2 சதவீத வாக்குகள் மற்றும் 6 – 12 இடங்கள் என்பது தான்.

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 0 – 2 இடங்கள் மற்றும் 5.1 சதவீத வாக்குகள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கருத்துக் கணிப்புகள் உதயசூரியனுக்கு வெற்றி என்று கூறினாலும், தேர்தல் நாள் வரை தமிழக வாக்காளர்களின் மனநிலை இதே நிலையில் தொடருமா.? என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது. திமுக தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ளும் என்று உறுதியாக கூறுகின்றனர் உடன்பிறப்புகள். பொறுத்திருந்து பார்ப்போம்.


banner

Related posts

புதுச்சேரியில் விறு விறு வாக்குப்பதிவு.. அமைதியாக நடந்து முடிந்த தேர்தல்..

Ambalam News

ஆவின், கோ-ஆப் டெக்ஸ், முதல்வர் மருந்தகங்ளில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் அடையாள அட்டைக்கு பிரத்யேக சலுகைகள் – துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Ambalam News

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய வழக்கு..கால அவகாசம் கேட்கும் மதுரை ஆதீனம் தரப்பு

Ambalam News

Leave a Comment