13 கிலோ கஞ்சா வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கஞ்சா வியாபாரி சந்திரகாண்டீபனை வேட்பாளராக அறிவித்த விஜய்.!! போதையில்லா தமிழகம் அமைப்போம்.!! – தவெக விஜய்


போதையில்லா தமிழகம் அமைப்போம்.. மகளிருக்காக குரல் கொடுப்போம்.. என்று முழங்கிய தவெக தலைவர் விஜய் போதை இல்லா தமிழகம் அமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கஞ்சா வழக்கில் கைதாகி, 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நபரை தவெக பேராவூரணி தொகுதி வேட்பாளராக அறிவித்தது அவரது கொள்கை வாக்குறுதி மீது அவரது கட்சியினருக்கே பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது. சமூக ஊடகங்களில் தவெக விஜய் குறித்த கருத்துப் பதிவுகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்​டசபை தேர்​தல் ஏப்​ரல் 23 ஆம் தேதி நடை​பெற உள்ளது. இதில் திமுக, அதி​முக, தவெக, நாதக, சசிகலா – ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நில​வு​கிறது. திமுக, அதி​முக கூட்​டணி கட்​சிகளில் வேட்​பாளர்​கள் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு​விட்​டது.

234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்துள்ளது தவெக நேற்று சென்னையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்பாளர்களை விஜய் அறிமுகப்படுத்தினார். அதன்படி பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் விஜய் போட்டியிடு​கிறார். வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னதாக இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் விஜய்.

முதல் வாக்குறுதியாக, “போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்” என்று அறிவித்தார் தவெக தலைவர் விஜய். போதைப்பொருட்கள் உள்வரவை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களை கொண்டு வருவோம். சமூக காவல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம். போதைப்பொருட்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை எதிர்ப்பு மன்றங்களை நிறுவுவோம் என்று அறிவித்தார் விஜய்.

இந்நிலையில், விஜய் வேட்பாளராக அறிவித்த பேராவூரணி தொகுதி வேட்பாளர் சந்திரகாண்டீபன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இவர், 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாமீனில் வெளிவந்த சில நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அவர் சீட் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியான நிலையில், விஜய் குறித்தும் அவரது அரசியல் குறித்தும் வேட்பாளர் தேர்வும் குறித்தும் மக்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர். கஞ்சா வியாபாரியை வேட்பாளராக்கியவர் போதை இல்ல தமிழகத்தை உருவாக்க போகிறாரா.? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்துள்ளனர் மாற்றுக் கட்சியினர்.


banner

Related posts

திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

Ambalam News

லண்டன்: பெரியாரின் சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது, மானிடச் சமுதாயத்திற்கானது.! உலக மக்களுக்கு பொதுவானது! அதுதான் பெரியாரியம்! மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Ambalam News

வடமாநில தொழிலாளர்கள் கல்வீச்சு – காவல் துணை ஆணையாளர் காயம்.. போலீசார் தடியடி..50 பேர் கைது..

Ambalam News

Leave a Comment