சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல் | தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.சி.பால் கனகராஜ் வெற்றி.. ஹெச். ராஜா, அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வாழ்த்து..


சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் (எம்​எச்​ஏஏ) புதிய தலை​வ​ராக பாஜக மாநிலத் துணைத் தலை​வ​ராக பதவி வகிக்​கும் வழக்​கறிஞர் ஆர்​.சி.​பால்​க​னக​ராஜ் 5-வது முறை​யாக மீண்​டும் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளார். ஆசி​யா​விலேயே மிக பழமை​யான சென்னை வழக்​கறிஞர்​கள் சங்​கத்தின் தலை​வ​ராக 5-வது முறை​யாக ஆர். சி. பால்கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சுமார் 20 ஆயிரம் வழக்​கறிஞர்​களை உறுப்​பினர்​களாக கொண்ட சுமார் 150 வருட பாரம்​பரியமிக்க, மிகப்​பெரிய வழக்​கறிஞர்​கள் சங்​க​மான சென்னை உயர் நீதி​மன்ற வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தின் (எம்​எச்​ஏஏ) தேர்​தல் கடந்த ஏப்​ரல்.29 அன்று நடந்​தது.

இந்த தேர்தலில் தங்​களது நிலு​வைக் கட்​ட​ணத்தை முறை​யாக செலுத்தி உறுப்​பினர் பதிவை புதுப்​பித்த 5 ஆயிரத்து 902 வழக்கறிஞர்களுக்கு வாக்​குரிமை அளிக்​கப்​பட்​டது. இதில் 4 ஆயிரத்து 353 வாக்​கு​கள் பதி​வானது. இந்த தேர்​தலில் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பாஜக மாநிலத் துணைத் தலை​வ​ரான ஆர்​.சி. பால்​க​னக​ராஜ் ஆயிரத்து 892 வாக்​கு​கள் பெற்று மீண்​டும் தலை​வ​ராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

ஆர்​.சி. பால்​க​னக​ராஜை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட சங்​கத்​தின் முன்​னாள் செய​லா​ள​ரான ஆர்.கிருஷ்ணகு​மார் 1307 வாக்​கு​கள் பெற்று இரண்​டா​மிட​மும், பார் கவுன்​சில் உறுப்​பின​ரான எம்.வேல்​முரு​கன் 860 வாக்​கு​கள் பெற்று மூன்​றாமிட​மும் பிடித்​தனர்.

இதே​போல செய​லா​ளர் பதவிக்கு போட்​டி​யி்ட்ட தவெக வழக்​கறிஞரணி மாநில ஒருங்​கிணைப்​பாள​ரும், சங்​கத்​தின் முன்​னாள் துணைத் தலை​வரு​மான எஸ். அறிவழகன் வெற்றி பெற்​றார்.

இதே​போல துணைத் தலை​வர் பதவிக்கு சசிக்​கு​மாரும், பொருளாளர் பதவி்க்கு ஜி.​ராஜேஷூம் வெற்றி பெற்​றனர்.

தலை​வ​ராக மீண்​டும் தேர்​வாகி​யுள்ள ஆர்​.சி,​பால்​க​னக​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “என் மீது நம்​பிக்கை வைத்து ஆசி​யா​விலேயே மிக பழமை​யான இந்த வழக்​கறிஞர்​கள் சங்​கத்​தில் என்னை 5-வது முறை​யாக தலை​வ​ராக தேர்ந்​தெடுத்​துள்​ளனர்.

வழக்​கறிஞர்​களின் நலன் தான் முக்​கி​யம். அரசி​யலுக்கு இந்த சங்​கத்​தில் எந்த வேலை​யும் இல்​லை. சாதி, மதங்​களுக்கு அப்​பாற்​பட்டு வழக்​கறிஞர்​களின் குரலாக நடுநிலை​மை​யுடன் செயல்​படு​வேன் என்றார்.

பாஜகவை சேர்ந்த ஹெச். ராஜா, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் ஆர். சி. பால்கனகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


banner

Related posts

‘ஜோசப் விஜய் என்னும் நான்’ முதல்வர் சீட்டில் அமர்ந்த விஜய்!

Ambalam News

கதறல் சத்தம் கேக்குதா CM.? சட்டசபைக்கு கையில் பதாகையுடன் வந்த உதயநிதி ஸ்டாலின்

Ambalam News

தமிழே தெரியாதவர் தமிழகத்தின் டெல்லி பிரதிநிதியா.? நன்றாகவே மணக்கிறது“மாற்றம்”முதல்வர் விஜய்யை சாடும் எதிர்க்கட்சியினர்..

Ambalam News

Leave a Comment