‘ஜோசப் விஜய் என்னும் நான்’ முதல்வர் சீட்டில் அமர்ந்த விஜய்!


தமிழக அரசியலில் கடந்த ஒரு சில நாட்களாக நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. ‘ஜோசப் விஜய் என்னும் நான்’ குரல் அரசியல் அரங்கில் ஒலிக்க தமிழகத்தின் முதலமைச்சராக திமுக கூட்டணியில் தேர்தலில் நின்று வென்ற கட்சிகளின் ஆதரவோடு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.

தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்ற விஜய், நேரு ஸ்டேடியத்தில் இருந்து புறப்பட்டு விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு அவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் அமருமாறு செங்கோட்டையன் கூறியபோது விஜய் அந்த சீட்டை பார்த்ததும் வெட்கத்துடனும் ஆச்சரியத்துடனும் சிரித்தபடியே அமர்ந்தார்.
முதல்வர் நாற்காலியில் அமர்ந்த முதல்வர் விஜய் சில கோப்புகளில் கையெழுத்திட்டார்
முதல்வர் விஜய்க்கு தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள், முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று மாலை சோழவந்தான் தனி தொகுதி எம்.எல்.ஏ சண்முகம் தற்காலிக சட்டசபை சபாநாயகராக பதவியேற்க உள்ளார். நாளை காலை தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.


banner

Related posts

மண்டல தலைவர்கள் ராஜினாமா.? முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

Ambalam News

தவெக விஜய் மீது வழக்கு.? | தேர்தல் நடத்தை விதி மீறியதால் தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பாய்ந்தது.!? ஆம்புலன்ஸுக்கு வழி விடாமல் விஜய் செய்த செயல்.!

Ambalam News

ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி தொகுதி | ஆர். வைத்திலிங்கம், மனோஜ் பண்டியன் எந்த தொகுதியில் போட்டி.?. முழு விவரம்.!

Ambalam News

Leave a Comment