காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள்.! திமுக வெளியிட்ட லிஸ்ட்..


காங்கிரஸ் திமுக கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறியாகி, பல கட்ட பேசுவார்த்தைக்கு பின்னர் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 35-க்கும் மேல் எதிர்பார்த்த காங்கிரசுக்கு 28 தொகுதிகளை ஒதுக்கியது திமுக. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் குறித்த அறிவிப்பினை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா வெளியிட்டுள்ளார். இதன்படி நாங்குநேரி, வேளச்சேரி, விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகள் காங்கிரசுகு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் சார்பில் விருப்பப் பட்டியல் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது என்னென்ன தொகுதிகள் என்பது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:
1.பொன்னேரி (தனி) 2.திருப்பெரும்புதூர் (தனி) 3.சோளிங்கர் 4.உதகமண்டலம் 5.ஈரோடு(கிழக்கு) 6.அறந்தாங்கி 7.கடலூர் 8.மயிலாடுதுறை 9.காரைக்குடி 10.சிவகாசி 11.திருவாடனை 12.திருவைகுண்டம் 13.நாங்குநேரி 14,குளச்சல் 15.விளவங்கோடு 16.கிள்ளியூர் 17.வேளச்சேரி 18.ஊத்தங்கரை (தனி) 19.துறையூர் (தனி) 20.கவுண்டம்பாளையம் 21.ஆத்தூர் (தனி) 22.பென்னாகரம்
23.சிங்காநல்லூர் 24.அம்பாசமுத்திரம் 25.கிருஷ்ணகிரி 26.உசிலம்பட்டி 27.சங்கரன்கோவில் 28. மேலூர் ஆகிய 28 தொகுதிகளை திமுக காங்கிரஸ்க்கு ஒதுக்கியுள்ளது.


banner

Related posts

நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பீரங்கி காளியம்மாள் அதிமுகவில் சேர்ந்தார் | அதிமுக சார்பில் மயிலாடுதுறையில் போட்டி? எடப்பாடி பழனிச்சாமி போடும் அரசியல் கணக்கு..

Ambalam News

உத்தரகாசியில் மேகவெடிப்பு, திடீர் வெள்ளம், மண்சரிவு, ராணுவ வீரர்கள் 11 பேர் மாயம்

Ambalam News

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை இணையத்தில் வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Ambalam News

Leave a Comment