தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மறுதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த பனை தொழிலாளியான மணிகண்டன் என்பவரை ரௌடியை போல விரட்டி விரட்டி சுட்டதோடு, 17 வயது பெண்ணை ஆபாசமாக பேசி துப்பாக்கியால் சுட முயற்சித்து இருக்கிறார் அட்ராசிட்டி போலீஸ் எஸ் ஐ.இசக்கி ராஜா
கள் இறக்குவதாக வந்த தகவலை அடுத்து, சோதனை செய்ய சென்றதாக கூறிக்கொள்ளும் இசக்கிராஜா அங்கிருந்த மணிகண்டனை பிடித்து பனைமரம் ஏறச் சொல்லி இருக்கிறார். அப்போது கேட்ட வார்த்தைகளால் திட்டி இருக்கிறார். அசிங்கமாக பேசாதீர்கள் என்று நியாயம் கேட்ட மணிகண்டனின் அப்பாவையும் அசிங்கமாக பேசியுள்ளார். தனது தாத்தா வை அசிங்கமாக திட்டாதீர்கள் என்று கூறிய மணிகண்டனின் அண்ணன் மகளை உச்சகட்ட ஆபாச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் எஸ். ஐ. இசக்கி ராஜா. இதனால் ஆத்திரமடைந்து தட்டி கேட்ட மணிகண்டனுக்கும் இசக்கிராஜாவுக்கும் கைகலப்பு ஏறப்பட்டுள்ளது. இருவரும் கட்டி உருண்டதில் இசக்கி ராஜாவின் மண்டை உடைந்துள்ளது.
பனைமர தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதோடு, அவர் மீதே ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் ஆணிவேல் இசக்கி ராஜாவுக்கு ஆதரவாகவே செயல்படும் இவரது சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதே காவல் ஆய்வாளர் ஆடிவேல் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சுள்ளான் அகிலன் என்ற ரௌடியை காலில் சுட்டுப் பிடித்த விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானவர் என்கின்றனர். இவரும் இசக்கி ராஜாவை போல மைனட்செட் கொண்டவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், சத்திரிய சான்றோர் படை உள்ளிட்ட காட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து எஸ். ஐ இசக்கி ராஜா மீது சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்துள்ளார் தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி.
ஆனால், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை போதாது அவரை பணி நீக்கம் செய்யவேண்டும் ஆய்வாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி அரசியல் கட்சியினரும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எவ்வித குற்ற வழக்குகளும் இல்லாத மணிகண்டனை பார்க்க துப்பாக்கியுடன் எதற்கு சென்றார். அப்படியே அவர் கள் இறக்கியிருந்தாலும் கைது செய்து நீதி மன்றனத்தில் நிறுத்த வேண்டியது தானே.? என்ற கேள்விகக்கு பதிலில்லை. இவரது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வேறு சமூக விரோத செயல்கள் நடக்கவில்லையா.? கஞ்சா குற்றவாளிகளை சுடுவாரா.? என்ற கேள்விகள் எழுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையா.? என்ற கேள்விகக்கு ஆலங்குளம் ஆய்வாளரும் எஸ். ஐ. இசக்கிராஜாவும் மட்டுமே பதிலளிக்க கடமைப்பட்டவர்கள்.
சிங்கம் பட சூர்யா போலீஸ் சாமி பட விக்ரம் போல நினைத்துக்கொண்டு அடிக்கடி சமூக ஊடகங்களில் ரீலஸ் போடும் விளம்பர போலீஸ் எஸ். ஐ. இசக்கி ராஜா அப்பாவி மக்களிடம் அட்ராசிட்டி செய்து கெத்து காட்டி வருதாக ஆலங்குளம் பகுதி மக்கள் குற்றச்சாட்டை வீசுகின்றனர். இவர் குடும்பத்தினர் மீது பல குற்ற வழக்குகள் இருந்துள்ளது. இவர்மீது சாதிரீதியாக செயல்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. ”ரீல்ஸ் விளம்பர பைத்தியம் பிடித்த எஸ்.ஐ.இசக்கிராஜாவின் துப்பாக்கி இப்போது அப்பாவி பொதுமக்கள் பக்கம் திரும்பியுள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.
இது போன்ற சாதிவெறி பிடித்த ரீலஸ் பில்டப் அதிகாரிகள் காவல்துறைக்கு தேவையா.? என்ற கேள்வி வின்னதிர எதிரொலிக்கிறது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆலங்குளம் காவல்நிலைய ஆய்வாளர், போலீசாரை விசாரித்து முறையான நடவடிக்கை எடுப்பாரா.?

