தமிழக சட்டமன்ற தேர்தல் | தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த 189.74 கோடி.. பொதுமக்களுக்கு உதவ அலைபேசி எண்களை அறிவித்த தேர்தல் ஆணையம்..


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தமிழக முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் வாயிலாக தேர்தல் ஆணையம் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதூம் வாக்காளர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
தேர்தல் ஆணையத்தால் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. 26.03.2026 இன்றைய தேதி நிலவரப்படி இக்குழுக்களால் மொத்தம் 189.74 கோடி ரொக்கத்தொகை, மதுபானம், போதைப்பொருட்கள், தங்கம், வெள்ளி, இலவசப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மாநிலம் முழுவதும் 2169 தகர்தல் கண்காணிப்பு பறக்கும்படைகள் மற்றும் 2166 நிலைகண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணம் மதுபானம் மற்றும் இதர கவர்ச்சி பொருட்களை, வழங்கி விதிமுறைகளை மீறி வாக்குகளை கவருவதை தடுக்கும் பொருட்டு, பணியாற்றி வருகின்றன.

பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களை சமர்ப்பித்து திரும்ப பெற்றுக்கொள்ள மாவட்டம் தோறும் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பறிமுதல் தொடர்பான குறைகளுக்கு இக்குழுக்களை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.


மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்களின் தொடர்பு எண்ககளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


banner

Related posts

கலைஞர் பல்கலை. மசோதா.. குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Ambalam News

“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் சில பரிமாணங்கள்..மருத்துவதுறையில் அரசு செய்யவேண்டியது என்ன.?-மருத்துவர் மரு.வீ.புகழேந்தி.

Ambalam News

திமுகவில் கனிமொழிக்கு சீட்.!? ஒன்றிய அரசியலில் அங்கம் வகிக்கும் கனிமொழி மாநில அரசியலுக்கு திரும்புகிறார் ..! திமுக தலைமை பரிசீலனை..?

Ambalam News

Leave a Comment