உளவுத்துறை ரிப்போர்ட்.? திமுகவால் குறிவைக்கப்படும் 70 தொகுதிகள்.!


தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட்டுவிடும் என்ற நிலையில், திமுக பலகீனமாக இருக்கக்கூடிய தொகுதிகள் குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் திமுக தலைமையை உஷார்படுத்தியுள்ளது என்கின்றனர்

இந்த ரிப்பவரத்தின் அடிப்படையில் திமுக சுமார் 70 இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த தொகுதிகளில் வென்றே தீர வேண்டும் என்பதில் திமுக தலைமை உறுதியாக இருக்கிறதாம்.

பிப்ரவரி கடைசி வாரம் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேற்கு வங்க SIR இறுதி லிஸ்ட் பிப்ரவரி 28ம் தேதி வரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அதற்கு மறுநாள் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிப்பிடப்படும் என்று கூறப்படுகிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக இந்த தேர்தலுக்காக கூட்டணி அமைப்பதை விட களப்பணி செய்வதை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மகளிரணி கூட்டம், இளைஞரணி கூட்டம், திமுக செயல் வீரர்கள் கூட்டம், பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் என்று வரிசையாக கூட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கூட்டணி தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தைகளும் இறுதி கடிதத்தை எட்டி விட்டதாக கூறப்படுகிறது. இனி தேர்தல் வேலைகளில் மட்டுமே முழு கவனத்தோடு பயணிப்பதே திமுகவின் இலக்கு என்ற நிலையில் முக்கிய நிர்வாகிகளை முடுக்கி விட்டிருக்கிறது திமுக தலைமை.

இந்த 70 தொகுதிகளில் சென்ற முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதிகளில் தற்போது திமுக ஆட்சிக்குறித்து மக்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்பட்டு அந்த தொகுதிகளில் அதிக வாக்குகளை அறுவடை செய்ய நிவாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் வாக்குறுதிகளும் அதற்கேற்றற்போல இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கொங்கு மண்டலம் டெல்டா மண்டலம் ஆகிய இரு பகுதிகளிலும் தீவிர கவனத்தை செலுத்தும் திமுக தலைமை வீக்காக உள்ள 70 இடங்களில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்பதில் அதிக கவனத்துடனும் உறுதியுடனும் இருப்பதாக கூறப்படுகிறது


banner

Related posts

ஆட்சியா.? கட்சியா.? எடப்பாடியாரின் முடிவு என்ன.? நடுத்தெருவில் நிற்கப்போகிறாரா.?செங்கோட்டையன்… அண்ணாமலை மீது பாஜக நடவடிக்கையா.?

Ambalam News

ஏதே..? விஜய் தலைமையில் மூணாவது கூட்டணியா.!? அட என்னய்யா சொல்ற.?

Ambalam News

எடப்பாடி பழனிச்சாமியுடன் மல்லுக்கட்டு – ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை.!?

Ambalam News

Leave a Comment