நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பின் அவர் நடித்து ரிலீசாகும் திரைப்படம் ஜனானாயாகன். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீசாகிறது. அதே சமயம் ஜனவரி 14 ம் தேதி ரிலீசாகவிருந்த சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படத்தை தேதியை மாதிரி பத்தாம் தேதியே ரிலீஸ் செய்கின்றனர். ஜனவரியில் அடுத்தடுத்த நாட்களில் படம் வெளியாவதால் ஜனநாயகன் படத்திற்கு vs சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் தான் போட்டிஎன்று திரையுலகத்தில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் சில கருத்துக்களை கூறி, கொந்தளித்து வருகின்றனர்.
விஜய்யை வைத்து ஹெச். வினோத் இயக்கியிருக்கும் ஜனநாயகன் படம்தான் தளபதிக்கு கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு பிறகு திரையில் அவரை பார்க்க முடியாது என்பதால், இப்படத்தின் ரிலீஸை பண்டிகை போல் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள் ரசிகர்கள். சாதாரணமாகவே விஜய் படம் முதல் நாள் கலெக்ஷனில் வேட்டை நடத்தும். இது கடைசி படம் என கருதப்படுவதால் நிச்சயம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று திரைத்துறையினர் கணித்திருந்த நிலையில் திடீர் திருப்பமாக 14ஆம் தேதி வெளியாக இருந்த சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே பத்தாம் தேதி ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.
சிவ. கார்த்திகேயன் விஜய்யுடன் வேண்டுமென்றே இந்தப் போட்டியை உருவாக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. சிவ. கார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதன் காரணமாக இந்தப் பொங்கலுக்கு விஜய்யின் ஜனநாயாகன் வெற்றியடையுமா.? இல்லை சிவ. கார்த்திக்கேயனின் பராசக்தி வெற்றியடையுமா.? என்ற மில்லியன் டாலர் கேள்வி திரையுலகில் எழுந்திருக்கிறது. கோட் படத்தில் தனது துப்பாக்கியை கொடுத்த சிம்பாளிக்காக தனது திரை வாரிசு என்று கூறிய, விஜய்யிடமே சிவகார்த்திகேயன் போட்டிப்போடும் அளவுக்கு வளர்ந்துவிட்டாரா? சிவ. கார்த்திகேயன் இப்படி செய்வார் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை என்று அவரது ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஆனால் சிவகார்த்திகேயனுக்கு எதிராக விஜய் ரசிகர்கள் செயல்படவோ பேசவோ கருத்து தெரிவிக்கவோ இல்லை என்றும் கூறப்படுகிறது.
இரு படங்களும் ரிலீஸ் ஆகும் போதே ரசிகர்களின் மனநிலை என்ன என்பது எதிரொலிக்கும்..
ஏ.கே.எம்.

