பக்குவப்படாத தலைவன்.! பறிபோன 31 உயிர்கள்.. தவெக விஜய் கரூர் பிரச்சாரம் – மக்கள் கடும் விமர்சனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை


தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் கருப்புநாளாக, இன்றைய நாள் அமைந்து விட்டது என்றுதான் கூறவேண்டியிருக்கிறது திக்கித்து நிற்போர் ஒருபுறம் இருக்க, இப்படியான சூழலிலும் மவுனித்து வேடிக்கை பார்ப்போரும் இருக்கவே செய்கிறார்கள். . யாரையும் விமர்சிக்க வேண்டாம். ஒரு இரங்கல் அறிக்கை காயமுற்றோர் நலம்பெற பிரார்த்தனை செய்வதாக ஒரு அறிக்கை என அவர்களிடம் இருந்து எதுவுமில்லை

பிரச்சாரம் செய்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் தவிர, ஆல் இன்டியா பார்ட்டிமுதல், அங்கீகாரம் இழந்திருக்கும் பார்ட்டிவரை, வருத்தமும், இரங்கலும், தெரிவித்திருக்கிறார்கள்.

யாருடைய கட்சியின் பிரசார நெரிசலில் சிக்கி அந்த தொண்டர்கள் உயிரிழந்தார்களோ, அந்தக் கட்சியின் தலைவர் விஜய் மட்டும் ஒன்றும் பேசாமல் ஏர்போர்ட்டுக்கு போய்விட்டார். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கோ, அல்லது விரும்பும் இடத்துக்கோ, சென்று சேர்ந்துவிடுவார் .

நாட்டின் பிரதம அமைச்சர், குடியரசுத் தலைவர், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என பலரும், பரிதாபமாக இறந்துபோன 33 பேருக்கும் இரங்கல் தெரிவித்தும்; நூற்றுக் கணக்கில் சிகிச்சையிலிருப்போர் மீண்டு வர பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடமான கரூர் – நாமக்கல் பகுதியில், திறந்தநிலை பிரசாரவேனில் நின்றுகொண்டு, த.வெ.க. தலைவர் விஜய், இன்று பேசிய பேச்சுகள் வரிக்கு வரி; அடுத்துவருகிற நாள்களில் அவருக்கே எதிராகத்தான் நிற்கப் போகிறது. அனுபவமற்றவருக்கு நல்ல அனுபவங்கள் கிடைக்கப்போகிறது.

இந்த துயர சம்பவத்தை கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின் தனது துபாய் பயணத்தை அவசரகதியில் ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக கரூர் போயிருக்கிறார், தலைமைச் செயலகத்தில் அவசரக்கூட்டத்தை, அனைத்துத்துறை அதிகாரிகள் – அமைச்சர்களுடன் நடத்தி முடித்துவிட்டு; துணை முதலமைச்சர் பயணப்பட்ட சில நிமிடங்களிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கரூர் போக தயாராகி விட்டார்.

இன்று நள்ளிரவு 1மணியளவில் கரூர் போய்விடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கலான காலகட்டங்களில், உணவு உறக்கம் தொலைத்து நள்ளிரவில் கூட பயணத்தை மேற்கொள்ளக்கூடிய முதலமைச்சரைப் பார்த்தும்; சக அரசியல் கட்சித் தலைவர்களைப் பார்த்தும்; இனிவரும் காலங்களில் எப்படிப் பேசுவது என்று திரு. விஜய் ஒரு முடிவெடுத்துக் கொள்ளவேண்டும்.

கோட்டையில் கலந்தாய்வு முடிந்த கையோடு, ஓய்வு நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்ததோடு; இறந்தோர் குடும்பத்துக்கு ரூபாய் தலா 10லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்; முதலமைச்சர். இன்னும் அதிகநிதி வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள், நடிகர் விஜய்யிடம் அந்த கோரிக்கையை வைத்து உதவிபெற்றுத் தரலாம்.

ஏற்கெனவே பிரசார பயணங்களில் நாற்காலிகளை உடைப்பது, ஃபேரிகார்டு (தடுப்பு கம்பிகள்) வளைப்பது- நொறுக்குவது என்று; நிறையமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது தவெக பிரசார காட்சிகள் என்பதை விமர்சகர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

மத்திய உள்துறை இதுபோன்ற இக்கட்டான நிலைகளின் போது அறிக்கை கேட்பது வழக்கம். இப்போதும் கேட்டிருக்கிறார்கள், என்னவென்று அறிக்கை கொடுப்பது.?

“போலீசார் அனுமதித்த நேரத்தை கடந்து நான்கு மணி நேரம் கழித்துதான், பிரசாரத்துக்கு திட்டமிட்ட இடம் நோக்கி தவெக தலைவர் எப்போதும் வருகிறார்; தாமதமாக போகிறார். இன்று நாமக்கல் வந்ததும், சொன்ன நேரத்தைவிட 4மணி நேரம் தாமதித்துதான். பாதுகாப்பு கருதி போலீஸ் தருகிற அனுமதிக்கப்பட்ட. இடத்தை எப்போதும் மறுத்து விட்டு, வேறோர் இடத்தைதான் தேர்வு செய்கிறார் திரு.விஜய். மெட்ராஸ் ஐகோர்ட், தவெகவின் பிரசார கூட்டத்துக்கு விதித்த நிபந்தனைகளை பின்பற்றுவது இல்லை; பாதுகாப்புக்கு வருகிற போலீசாரின் அறிவுறுத்தலை, ஆளுங்கட்சியான திமுகவின் மிரட்டல் என்று மடை மாற்றுவதை கடமையாக செய்கிறார் விஜய்” என்று தான் தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் அறிக்கை கொடுக்க வேண்டும்.

நான் கேப்டனின் தம்பி என்று சொன்னால் மட்டும் போதாது, கேப்டன் போல ஒற்றை விரலசைவில்; ஒற்றை குரலொளியில்; ஒட்டுமொத்த தொண்டனையும் கட்டிப்போடும் ஆளுமையும் சேர்ந்தே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் அந்தத்தகுதியை வளர்த்துக் கொள்வது நல்லது.

இதே கரூரில், இப்படியான பிரமாண்ட மாநாட்டை, ஆளுங்கட்சியான திமுக, கொஞ்ச நாள்களுக்கு முன்னர் நடத்தியது; காயம் இல்லை; மயக்கம் இல்லை; அதிகபட்சமாய் யாரும் சாகவில்லை; இது எப்படி சாத்தியப்பட்டது என்று யாராவது ஒரு கரைவேட்டியை கேட்டு அறிந்து கொண்டிருக்கலாம்.

அதுவும் பிடிக்கவில்லையா, அதிமுக தரப்பில் கேட்டிருந்தால்கூட சொல்லி இருப்பார்கள்; இதைவிட பலமடங்கு பிரமாண்ட கூட்டம்- மாநாடுகளை போட்ட கட்சி அது.
வழிநெடுக குண்டும் குழியுமாய் சாலைகள் இருந்ததால் கால்தடுக்கிதான் மொத்தபேரும் செத்துப்போனார்கள் என்று யாரும் புதிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு அசிங்கப்பட்டு விடாதீர்கள்..மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். .

நெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் இறந்துள்ளனர். 50 கும் மேற்பட்டோர் நிலைமை மிகவும் கவலைக்கிடம் என்று வருகிற தகவல்கள் உறக்கத்தை பல நாள்களுக்கு கெடுத்து வைத்திருக்கிறது என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்த துயர சம்பவம் நடந்து பல மணி நேரம் கடந்த நிலையில் தவெக தலைவர் விஜய், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.

கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


banner

Related posts

வேலைக்கு போகக்கூடாது.! மிரட்டிய கணவன்.. மனைவி செய்த கொடூர செயல்.!

Ambalam News

ராபர்ட் புரூஸுக்கு எதிரான தேர்தல் வழக்கு: நயினார் நாகேந்திரனிடம்1 மணி நேரம் குறுக்கு விசாரணை

Admin

நடிகை திருமதி எம்.என். ராஜம் வீட்டிற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து கூறிய மு.க.ஸ்டாலின்

Ambalam News

Leave a Comment