சென்னையை அடுத்த தாம்பரத்தில், 110 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வுக் கட்டடம் மற்றும் 3 நகர்புறத் துணை சுகாதார நிலையங்களையும் முதலமைச்சர் மு,க, ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வைத்தார்
மோடியால் சாதிக்க முடியாததை தான் சாதித்ததால், ஈபிஎஸ்-க்கு வயிற்றெரிச்சல் என குற்றம்சாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் ஆட்சியமைத்து இந்தியாவுக்கே வழிகாட்டியாக செயல்படுவோம் என உறுதி அளித்தார்.

இதனை தொடர்ந்து, பல்லாவரத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேசிய அவர், நிலம் தான் அதிகாரம் என்று கூறினார். திமுக ஆட்சி அமைந்தது முதல், தற்போது வரை 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொருளாதார வளர்ச்சியில், மோடியால் சாதிக்க முடியாததை தாம் சாதித்ததால், எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு இருப்பதாக விமர்சித்தார்.