துப்புரவுத் தொழிலாளர்களை செருப்பை அள்ளவைத்து இழிவுபடுத்திய தவெக – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!


சமூகத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் எளிய மனிதர்களான துப்புரவு பணியாளர்களை தவெகவினர் இழிவான முறையில் நடத்தியிருப்பது, துப்புரவு பணியாளர்களின் கண்ணியத்தை முற்றிலும் சிதைக்கும் மனிதநேயமற்ற செயல் என்று பலரும் தவெகவினரை கடுமையாக சாடியுள்ளனர்.

சென்னை விம்கோ நகரில் தவெக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்ட, திருவொற்றியூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) அலுவலகத் திறப்பு நிகழ்வின்போது, தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு வெறும் கைகளால் காலணிகளை அப்புறப்படுத்திய அநாகரிகமான செயல் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

சமூகத்தின் தூய்மைக்காகப் பாடுபடும் எளிய மனிதர்களை இத்தகைய இழிவான முறையில் நடத்தியிருப்பது, அவர்களின் கண்ணியத்தை முற்றிலும் சிதைக்கும் மனிதநேயமற்ற செயலாகும்; இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேடைகளில் சமத்துவம், சமூகநீதி மற்றும் தொழிலாளர் நலன் குறித்துப் பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தன் கட்சியின் பின்னணியில் நிகழ்ந்துள்ள இந்த அநீதிக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? எளிய மக்களின் உழைப்பையும் சுயமரியாதையையும் மதிக்காத இவர்களின் செயல், இவர்கள் பேசும் கொள்கைகள் அனைத்தும் வெறும் வெற்று முழக்கங்கள் தான் என்பதைக் காட்டுகிறது.

எனவே, இந்த அவலச் சம்பவத்திற்குத் தார்மீகப் பொறுப்பேற்று தவெக தலைவர் திரு. @TVKVijayHQ அவர்கள் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மக்கள் மத்தியில் வெற்று அரசியல் பேசாமல், தங்கள் கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதலில் மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.


banner

Related posts

தேசிய கீதம் | ஆளுநர் உரையைப் புறக்கணித்த ஆர்.என்.ரவி! ஆளுநர் உரை மரபை முடிவுக்கு கொண்டுவர திமுக நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

Ambalam News

பிரபல ரௌடி தொப்பை கணேசன் என்கவுண்டர் விவகாரம் | இரண்டு நாட்களுக்கு முன்பே போலீசாரால் பிடித்து செல்லப்பட்டாரா.? – திகில் கிளப்பும் உறவினர்கள்..

Ambalam News

அதிமுக ”ஊழல் சக்திகளை தாங்கிப் பிடிக்கும் தூய சக்தி”.!! தொடர்ந்து அதிமுகவுக்குள் கலகத்தை ஏற்படுத்தும் ”சோபா மாடல்” தவெக

Ambalam News

Leave a Comment