அதிமுக தொகுதி பங்கீடு | பாஜக – 27, பாமக – 18, அமமுக – 11, அதிமுக – 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு – இதர கட்சிகளுடன் இனிதான் டீலிங்.! பொற்கால ஆட்சி அமையும் – எடப்பாடி பழனிச்சாமி


பாஜக – அதிமுக கூட்டணியில் குழப்பங்கள் முரண்பாடுகள் என்று பல்வேறு யூகங்கள் கிளம்பி உலா வந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி குறித்து பாஜக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி சென்றுவந்தார். எடப்பாடி பழனிச்சாமியை அடுத்து பாஜக அதிமுக ( என்.டி.எ) வுடன் கூட்டணி அமைத்திருந்த பாமக அன்புமணி, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் பாஜக அழைப்பின் பேரில் டெல்லி பறந்தனர்.

இந்நிலையில், விரைவில் என்.டி.எ தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்போம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட தமிழகம் வருகை தந்திருந்தார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அதிமுக தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்திட்டுள்ளனர்.

என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுக-வின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.இதர கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 170 தொகுதிகளுக்கு குறையாமல் போட்டியிட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது


banner

Related posts

ராஜினாமா செய்துவிட்டு ஓடிய நேபாள் பிரதமர்.. கட்டுக்கடங்காத கலவரம்..! நேபாளத்தில் உண்மையில் என்ன நடக்கிறது..!

Ambalam News

“ஊர் ஒன்று கூடினால்தான் தேரை இழுக்க முடியும்” – காலம் பதில் சொல்லும்.. ஆர்.பி.உதயகுமாருக்கு செங்கோட்டையன் பதிலடி..

Ambalam News

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. டேக்வாண்டோ பயிற்சியாளர் மீது போக்ஸோ வழக்கு – ஒருவர் கைது.

Ambalam News

Leave a Comment