தமிழகத்தை உலுக்கும் தொடர் பாலியல் குற்றங்கள் | தற்குறி ஆட்சி தமிழநாடே சாட்சி |வாயில ஏதாவது வருமா CM.? கதறல் கேட்குதா.? CM வாயை திறங்க CM – உதயநிதி ஸ்டாலின்


2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கிய நடிகர் விஜய்யின் தவெக வெற்றி பெற்று பெரும்பான்மை பெறாத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தது. தவெக ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்து விட்டதாக எதிர் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. தவெக நிர்வாகிகள் தொண்டர்களே தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு சிக்கியது பெரும் விவாதப்பொருளாக மாறியது.

குறிப்பாக இரு தினங்களுக்கு முன்னர் சேலத்தில் தவெக நிர்வாகி மணிகண்டன் என்பவவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி அதை வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இந்த வழக்கில் எந்த வித ஒளிவு மறைவோ, அரசியல் கூறுக்கீடோ இல்லாமல் நியாயமான விசாரணை நடைபெற்று குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்று தனது தேர்தல் பரப்புரையில் பேசிய தவெக விஜய்யின் ஆட்சியில் தவெக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே பெண்களுக்கெதிரான 175 பாலியல் குற்றங்கள் 65 கொலைகள் 4 ஆணவப்படுகொலைகள் நடந்திருப்பது தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இந்நிலையில், 17 வது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை தொடங்கி வைத்து ஆளுநர் உரை நிகழ்த்தியுள்ளார்.. வாயை திறங்க CM என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து இந்த கூட்டத்தொடரில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். ஆளுநரின் உரையானது முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருப்பதாகவும் தவெகவினர் ரீலஸ் போட கான்டன்ட் போல இருப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக – த.வெ.க-வின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.

ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை. தொடர் மின்வெட்டு – பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு – விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly என்று குறிப்பிட்டுள்ளார்.


banner

Related posts

சென்னை மாநகராட்சி : சுத்தம் சுகாதாரம் பேசும்.!! வீட்டு வாசல் அருகே குப்பை தொட்டியை வைத்து நாறடிக்கும்.!!? தீர்வு காண்பாரா.? மேயர் பிரியா

Ambalam News

பாஜகவை ஏற்க தயாராக இல்லை.. உங்கள் கொள்கைகள் வேரறுக்கப்பட வேண்டும் -கர்ஜித்த கனிமொழி

Admin

விஐபிக்களுக்காக பக்தர்கள் காத்திருக்க வேண்டுமா.? திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு

Ambalam News

Leave a Comment