பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. லடாக்கில் வெடித்த வன்முறை


மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 60கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.பாஜக அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370 சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.

இந்நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி வழங்கும் 6 வது அட்டவணை அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, லேவில் உள்ள பாஜக அலுவலகம் முன், LAB என அழைக்கப்படும் லே உச்ச அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பாஜக அலுவலகத்துக்கு தீ வைத்ததுடன், அங்கிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கினர்

சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். பதற்றம் நீடிப்பதால் லேவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பதற்றம் நிலவுகிறது.

இதையடுத்து, லே உச்ச அமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவாக, கார்கில் ஜனநாயக கூட்டணி இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

புகைப்படம் நன்றி : z தமிழ் நியூஸ்


banner

Related posts

காலில் விழுந்த எல்.முருகன் | அதிமுக தனபால் வீட்டுக்குச் சென்று காலில் விழுந்து ஆசி பெற்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன்! நெகிழ்ச்சியில் உருகிய.? தனபால்..

Ambalam News

ஆம்புலன்ஸ் டிரைவர்களை தாக்கினால் 10 ஆண்டு சிறை

Ambalam News

ஜிஎஸ்டி வரி குறைப்பு | ஆவின் பால் பொருட்களின் விலையை குறைத்த தமிழ்நாடு அரசு

Ambalam News

Leave a Comment