சின்னத்திரையில் தோன்றி வெள்ளித்திரையில் பிரகாசித்த காமெடி குணசித்திர நடிகர் ரோபோ சங்கர் மரணம் திரையுலகை அதிரச்செய்திருக்கிறது. அரசியல் தலைவர்கள் நடிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தி அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
தன்னுடைய வலைதளப்பதிவில், திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி – சின்னத்திரையில் சாதித்து – திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தார் – நண்பர்கள் – கலையுலகினர் – ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் – இரங்கலையும் தெரிவித்தோம் என்று பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
Related posts
Click to comment