முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கு – விரைந்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..



எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் முறைகேடு வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு ஊழல் முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, புகார்தாரரான அறப்போர் இயக்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில், டெண்டர் முறைகேடு தொடர்பாக கோவை மாநகராட்சி துணை ஆணையராக இருந்த காந்திமதி என்பவருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்து தமிழக அரசு, ஆகஸ்ட் 30 ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசு அனுமதி பெற வேண்டியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, அரசியல்வாதிகளுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஏன் இவ்வளவு காலதாமதம் ஏற்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, இது போன்ற விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அறிவுறுத்தினார்.


banner

Related posts

சசிகலா, ஒபிஎஸ்ஸை கட்சியில் சேர்க்க.!? 10 நாள் காலக்கெடு – ஒற்றுமையே பலம் – கே.ஏ. செங்கோட்டையன்

Ambalam News

காவல்துறை, ஆசிரியர்களின் சாதிவாரி வாட்ஸ் அப் குழுக்கள் – சிபிஎம் செயலாளர் சண்முகம் பகீர் குற்றச்சாட்டு..! என்ன செய்யப்போகிறது.? தமிழக அரசு

Ambalam News

மும்மொழிக் கொள்கையை மாநில அரசுகளே முடிவு செய்யலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

Admin

Leave a Comment