பிரதமர் மோடி ஜப்பான், சீனாவிற்கு இன்று பயணம்..!


பிரதமர் மோடி ஜப்பான், சீனா ஆகிய நாடுகளுக்கு 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று செல்கிறார். இருநாட்டு தலைவர்களையும் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்தியா-ஜப்பான் 15 வது வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஜப்பான் செல்கிறார். நாளை ஜப்பானில் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகேரு இஷிபாவுடன் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியா, ஜப்பான் இடையேயான ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு 8 வது முறையாக ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு வரும், 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி சீனா செல்கிறார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டின் ஒருபகுதியாக சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பல உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பை மேற்கொள்ள இருக்கிறார். 2018 இந்தியா, சீனா படைகள் இடையே, நடந்த மோதலுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக சீனா செல்கிறார்.


banner

Related posts

மூளை அமீபா பாதிப்பு தொற்று நோய் அல்ல.. பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது – பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Ambalam News

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை – இளைஞர் போக்ஸோவில் கைது

Ambalam News

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Ambalam News

Leave a Comment