தென்னிந்தியாவில் முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும் தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சரின் சமூக வலைதளப் பக்கதில், தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும், தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி வைத்ததில் பெருமையடைகிறேன்!
தொடங்கி வைத்தபோது பேசிய மாணவர்கள், “தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்தக் கல்வி நிறுவனத்தில் பத்து மடங்குக்கும் குறைவாகவே செலவாகும்” என்று குறிப்பிட்டுப் பேசியது மகிழ்ச்சியளித்தது!
மக்களாட்சியைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் ஒன்றான ஊடகப் பணிக்கு ஊக்கமளிக்கும் வகையில் நமது அரசு செய்துள்ள இந்தப் பங்களிப்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இணைந்துள்ள மாணவர்கள், தங்களது கல்வியைச் சிறப்புற நிறைவு செய்திட வாழ்த்துகிறேன்!
எங்களது அழைப்பை ஏற்று வருகை தந்த முன்னணி ஊடகங்களைச் சேர்ந்த அத்தனை நண்பர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றி! என்று கூறியுள்ளார்.
Related posts
Click to comment