வாயில் வெடி வைத்து வெடித்து கள்ளக்காதலி கொலை – கள்ளக்காதலன் கைது..



கர்நாடக மாநிலத்தில் இளம் பெண்ணின் வாயில் டேட்டனேட்டர் வைத்து வெடிக்க செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சுபாஷ் என்பவரது வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் காவல்துறையிடம் புகாரளித்தார். இந்தக் கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இதனால் காவல்துறையின் வீட்டிலிருந்தவர்கள் மீது விசாரணையை திருப்பினர். வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் காவல்துறை விசாரணை செய்தது. அப்போது திருட்டு நடந்த வீட்டில் வாசித்த சுபாஷின் மனைவி தர்ஷிதா கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்ற விபரம் தெரியவந்துள்ளது. தர்ஷிதாவை காவல்துறையினர் மற்றும் அவரது கணவர் சுபாஷ் ஆகியோர் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்களால் தர்ஷிதாவை தொடர்பு கொள்ளவோ, கண்டுபிடிக்கவோ முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில போலீசுக்கு கேரள போலீஸ் தகவல் கொடுத்தனர்.
இதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய கர்நாடக போலீசார் தர்ஷிதாவை தேடிவந்த நிலையில், கர்நாடக மாநிலம் சாலிகிராமம் என்ற பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முகம் வெடித்து சிதறிய நிலையில் சடலமாக தர்ஷிதாவை மீட்டனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, கர்நாடக போலீஸ் நடத்திய விசாரணையில், கிருஷ்ணராஜு என்ற நபர் தர்ஷிதாவை கொலை செய்தது தெரியவந்த நிலையில், கிருஷ்ணராஜுவை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் தர்ஷிதா மற்றும் கிருஷ்ணராஜு இடையே இருந்த கள்ளத்தொடர்பு தெரிய வந்திருக்கிறது.
கர்நாடக மாநிலத்திலுள்ள தாய் வீட்டிற்கு சென்ற தர்ஷிதா, தனது மகனை அங்கே விட்டுவிட்டு கேரளாவிற்கு திரும்பி தனது கணவன் வீட்டிலுள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தனது கள்ளக்காதலனான கிருஷ்ணராஜுவை பார்க்க சென்றிருக்கிறார். பின்னர் கள்ளக்காதலர்கள் இருவரும் சாலிகிராமம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், கிருஷ்ணராஜூ தான் வைத்திருந்த டெட்டனேட்டரை, தர்ஷிதா வாயில் கட்டி, வெடிக்கச் செய்து அவரை கொடூரமாக கொலை செய்து விட்டு, தர்ஷிதா கொண்டுவந்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி இருக்கிறார். வாக்குமூல பெற்ற போலீசார் கிருஷ்ணராஜூவை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


banner

Related posts

மு.க.ஸ்டாலினின் ‘’ஓரணியில் தமிழ்நாடு’’ 2 கோடி தமிழக மக்கள் திமுகவில் இணைந்தனர்?

Admin

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கார் ஏற்றி கொலை.. திமுக பிரமுகர் கே.கே. நகர் தனசேகரன் பேரன் கைது..

Admin

விஜய்யுடன் கூட்டணி.? எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்.! ஒபிஎஸ்

Ambalam News

Leave a Comment