வனத்துறை காவல் சித்ரவதை மாரிமுத்து மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட போராட்டம்..



திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை செட்டில்மெண்ட் பகுதி பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மீதும் மேலும் 5 பேர் மீதும் கடந்த 2022 ம் ஆண்டு கஞ்சா வளர்த்ததாக வனத்துறையினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமின் பெற்ற மாரிமுத்து வனத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல், நேரடியாக வழக்கு விசாரணைக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இவருடன் கைதான மற்ற 5 பேரும் வனத்துறை விசாரணைக்கு ஆஜராகி வந்துள்ளனர்.


இந்த வழக்கு விசாரணையில் போதிய ஆதாரம் இல்லாததால் கடந்த 29-ஆம் தேதி மாரிமுத்துவை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் 29- ஆம் தேதி மாலை, மூணாறுக்கு பேருந்தில் சென்ற மாரிமுத்துவை சிறுத்தைப் பல் கடத்தியதாக வனத்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்தில் உள்ள கழிவறையில் மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தை பல் வைத்திருந்ததாக உடுமலையைச் சேர்ந்த மாரிமுத்துவை கேரள வனத்துறையினர் பிடித்து தமிழ்நாடு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். உடுமலை வனச்சரக அலுவலகத்தில் விசாரணைக்கு இடையே மாரிமுத்து பாத்ரூமில் உள்ள சவர் கம்பியில் தனது கைலியால் தூக்குப்போட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, விசாரணையின்போது மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தான் அணிந்திருந்த கைலியால் சவர் கம்பியில் தூக்குப்போட்டு இறந்ததாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வனத்துறையின் காவல் சித்திரவதையால் மரணம் அடைந்த மாரிமுத்து கடந்த 7 வருடங்களாகவே கேரளாவில் தான் வசித்து வருகிறார்.
தன் மீதான “கஞ்சா வளர்ப்பு” வழக்கிலிருந்து 29 ஆம் தேதி விடுவிக்கப்பட்டு தீர்ப்பு பெறுகிறார். இக்குற்றச்சாட்டுக்கு ஆளான மற்றவர்கள் வனத்துறையால் ஆரம்பக் கட்டத்தில் கைது செய்யப்பட்ட போதும், பழங்குடி மாரிமுத்து இந்த வழக்கில் வனத்துறையால் இறுதி வரை கைது செய்யப்படாமல் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று இறுதியாக விடுதலையும் ஆனது வனத்துறைக்கு மிகுந்த ஆத்திரத்தை அவர் மீது ஏற்படுத்தியிருக்கிறது.


29 ம் தேதி உடுமலைப்பேட்டையில் இருந்து கிளம்பி மூணாறு சூரியநெல்லி அருகே மனைவியுடன் வசித்து வரும் கிராமத்திற்கு நள்ளிரவில் செல்கிறார். மீண்டும் அதிகாலை 30 ஆம் தேதி கிளம்பி உடுமலைப்பேட்டை நீதிமன்றத்திற்கும் வழக்கறிஞரை சந்திப்பதற்காகவும் வருகிறார். மேலும் வனத்துறை தான் மீது கோபத்தில் இருக்கிறது என்பதை நான்கு உணர்ந்திருந்த மாரிமுத்து விடுதலை ஆன அன்றே குற்றச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். சிறுத்தை பல் வைத்திருந்தார் என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை
குறிப்பாக கேரளா கலால் துறை சம்பந்தப்பட்ட மாரிமுத்து பேருந்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த உறுதியாக தகவலின் பேரிலேயே அவரை அரசு பேருந்தில் இருந்து மாலை 4 மணியளவில் இறக்கி சோதனை செய்துள்ளார்கள். அவரிடம் கஞ்சா இல்லை. ஆனால் அவருடைய உள்ளாடையில் சிறுத்தையின் பல் ஒன்று இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பழங்குடியாக மூடநம்பிக்கையில் வைத்திருக்க வாய்ப்பு இருந்தாலும் கடந்த 7 வருடங்களாக கேரளாவில் வசித்து வரும் அவரை எதற்காக தமிழக வனத்துறையிடம் கேரள கலால்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். மாரிமுத்து கேரளாவில் ஓரிரு வனம் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக வனத்துறையோடு இணைந்து பணியாற்றும் சூழலியல் செயல்பாட்டாளர்களும், வனத்துறை நண்பர்களும் கூறும் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் கேரள கலால் துறையினரே கைது செய்திருக்கலாமே.?
ஆனால் திட்டமிட்டு அவர் ஏதோ மிகப்பெரிய வனக்குற்றத்தை செய்தபோது கையும் களமாக பிடித்தது போல் பிடித்த கேரள வனத்துறையினர் அவரை தமிழக வனத்துறையிடம் விசாரணைக்காக ஒப்படைத்து விடுகின்றனர். பின்னர். தமிழக வனத்துறையின் சின்னாறு சோதனை சாவடி முதல் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து கிட்டத்தட்ட 12 மணி நேரம் காவல் சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். மரணமடைய செய்துள்ளனர் உடுமலை வனச்சரக ஊழியர்கள்
வனத்துறை காவல் விசாரணையில் மாரிமுத்து இறந்ததால் உடுமலைப்பேட்டை நீதித்துறை நடுவர் நடத்தப்படும் விசாரணை‌ மற்றும் மேற்பார்வையின் கீழ் நடைபெறும் மாரிமுத்துவின் உடட்கூராய்வு மாரிமுத்துவின் காவல் மரணம் குறித்து மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால் மரணத்திற்கான பின்னணி வெளிவராது.
இரு மாநில வனத்துறை அதிகாரிகளும் இந்த விசாரணை மரணத்தில் சம்மந்தப்பட்டிருப்பதால், பழங்குடி மாரிமுத்து காவல் சித்திரவதை மரணம் குறித்து தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதன் மூலமே மாரிமுத்து உண்மையான மரணமும் அதற்கான காரணங்களும் வெளிவரும் அதோடு இதன் பின்னனியில் இருக்கும் முக்கிய புலிகளும் சிக்குவார்கள் என்கின்றனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி கேரளா மாநிலம் தேவிகுளம் எம்.எல்.ஏ. ராஜா தலைமையில், வனத்துறை அலுவலகம் முன்பு 500 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், மாரிமுத்துவை அழைத்துச் சென்று விசாரணை நடத்திய வனவர் நிமல், வனக்காவலர் செந்தில்குமார் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடுமலைப்பேட்டை வனச்சரகர் வாசு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீதிபதி நித்யகலா முன்னிலையில், மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் இருந்து மாரிமுத்துவின் உறவினர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாரிமுத்துவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
திருப்பூர் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையின் முன், மாரிமுத்துவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தங்கள் முதுவர் பழங்குடி மொழியில் கதறி அழுதனர். கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் முதுவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள்.

அம்பலம் புலனாய்வு செய்தி


banner

Related posts

கடன் தொல்லை மூன்று பெண் குழந்தைகளை கொடூரமாக கொன்று தந்தை தற்கொலை..

Ambalam News

‘’சண்டை போட்டுக்காதீங்க’’.! தேர்தல் வேலைய பாருங்க.! தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா அறிவுரை..!

Ambalam News

சென்னையில் பெண்களை பாதுகாக்க களமிறங்கும் – ரோபோட்டிக் காப்

Admin

Leave a Comment