முருகன் மாநாடு: எடப்பாடி பழனிச்சாமி மீது முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தி.! அதிமுகவில் நடப்பது என்ன?
எடப்பாடி பழனிச்சாமிக்கு அரசியல் ஆப்பு வைக்கத்தான் இந்த முருகன் மாநாடு என்று நகைப்புடன் முனுமுனுக்கின்றனர் ஆளும்கட்சி தொண்டர்கள். அவர்கள் கூறுவது போலவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான சந்திப்பில் முருகன் மாநாடு குறித்த சலசலப்பு பகிரங்கமாக வெடித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில், மே 15 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி பட்டியலை சமர்ப்பிக்க அதிமுக தலைமை வலியுறுத்தியிருந்தது.
இதன் தொடர்பாக நடந்த கூட்டத்தில் தான், முருகன் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்ள ஏன் அனுமதித்தீர்கள் என்று அதிமுக முன்னாள் முக்கியஸ்தர்கள் கொந்தளித்துள்ளனர்.

“முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டது கட்சியில் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி இருக்கிறது என்று பொரிந்து தள்ளியிருக்கின்றார் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி சற்று கடுமையாகவே எடப்பாடி பழனிச்சாமியிடம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியாதோடு, நம்ம ஆட்கள் மாநாட்டிற்கு சென்றிருக்கக்கூடாது. பெரியார், அண்ணாவை இழிவுபடுத்துகின்ற இடத்தில் நாம் இருக்கலாமா.? அந்த மாநாட்டிற்கு செல்ல நீங்கள் எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரை தொடந்து பலரும் வசைமழை பொழிந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்ததாகவும் தகவல்கள் கசிகிறது.
மாநாடு என்ற ஆயுதத்தால் முருகன் எடப்பாடி பழனிச்சாமியை வெகுவாக சோதிக்கிறார் என்கின்றனர்