தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்? – அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்


தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தவெக தட்டுத்தடுமாறி ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு தமிழக மக்கள் அச்சத்துடன் நாட்களை நகர்த்தி வருண் சூழலில், தவெக கட்சியினர் நிர்வாகிகளாலேயே மக்கள் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது, அரசு பேருந்து ஓட்டுனார்களை தாக்குவது, அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்து அட்ராசிட்டி செய்து ரீலஸ் வெளியிடுவது என்று அடாவடி அரசியல் செய்து வருகின்றனர். ஆய்வு என்ற பெயரில் அடாவடி செய்துவரும் தவெக நிர்வாகிகள் மீது முதலமைச்சர் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது.

சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் நிலையை உருவாக்கியுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், இந்த தொடர் சம்பவங்கள் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் குன்னலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தவெக நிர்வாகிகள் திடீரென புகுந்து ஆய்வு, இடும்பாவனம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தவெக நிர்வாகி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் முதலமைச்சர் படத்தை வைத்து தவெக நிர்வாகிகள் ரீல்ஸ் என நாளுக்குநாள் தொடரும் தவெகவினரின் அத்துமீறலுக்கு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்?

தவெக ஆட்சிக்கு வந்தவுடனே அம்மா உணவகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழைந்த தவெக நிர்வாகிகள் மீது இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்காததன் விளைவே தற்போது அரசுப் பள்ளிகளுக்குள் புகுந்து பாடமெடுப்பது போல ரீல்ஸ் எடுப்பது, பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பள்ளி வளாகத்தைப் பயன்படுத்தும் அளவிற்கான அவலநிலையை உருவாக்கியுள்ளது.

சட்ட விதிமுறைகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே இயங்க வேண்டிய அரசுத் துறைகளுக்குள் ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தேவையற்ற தலையீடு, அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் அழுத்தங்களைக் கொடுப்பதோடு, மக்கள் பணிகளிலும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த வழிவகுக்கக் கூடும்.

எனவே, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் ஆய்வு எனும் பெயரில் அத்துமீறி நுழையும் ஆளுங்கட்சியினருக்கு கடுமையான அறிவுறுத்தலை வழங்குவதோடு, அரசியல் தலையீடு அறவே இல்லாத வகையில் அரசுத்துறைகள் சுதந்திரமாக இயங்கிடும் சூழலை உருவாக்கிட வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன் என்று அவரது சமூக வலைதளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது கட்சிக்காரர்களுக்கு கடிவாளம் போடுவாரா.? தமிழக முதல்வர் விஜய்


banner

Related posts

தமிழக தீயணைப்பு ஆணைய தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்

Ambalam News

நகை திருட்டு புகார் அளித்தோம்… போலீசார் நடவடிக்கைகள் எங்களுக்குத் தெரியாது. – சி.பி.ஐ. விசாரணைக்குப்பின் நிகிதா பேட்டி..

Admin

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது

Ambalam News

Leave a Comment