காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு – ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு போட்டி..


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.

அதன்படி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர், வேளச்சேரியில் ஆசன் மவுலானா, ஸ்ரீபெரும்புதூரில் (தனி) செல்வப்பெருந்தகை ஆகியோர் போட்டியிடுகின்றனர் சோளிங்கரில் ஏ.எம். முனிரத்தினம், ஊத்தங்கரையில் (தனி) குப்புசாமி, கிருஷ்ணகிரியில் செல்ல குமார், பென்னாகரத்தில் ஜி.கே.எம். தமிழ் குமரன், ஆத்தூரில் (தனி) எஸ்.கே. அர்த்தனாரி, ஈரோடு(கிழக்கு) தொகுதியில் கோபிநாத் பழனியப்பன், உதகமண்டலத்தில் பி. ராமச்சந்திரன் ஆகியோரும், கவுண்டம்பாளையத்தில் சூர்ய பிரகாஷ், சிங்காநல்லூரில் ஸ்ரீநிதி நாயுடு, துறையூரில் (தனி) விச்சு லெனின் பிரசாத், கடலூரில் சந்திரசேகரன், மைலாடுதுறையில் ஜமால் யூனுஸ் முகம்மது ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அறந்தாங்கியில் டி. ராமச்சந்திரன், காரைக்குடியில் எஸ். மாங்குடி, உசிலம்பட்டியில் டி. சரவணகுமார், சிவகாசியில் கணேசன் அசோகன், திருவாடானையில் ராம கரு மாணிக்கம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் சங்கை கணேசன், அம்பாசமுத்திரத்தில் வி.பி. துரை, நாங்குநேரியில் ரூபி மனோகரன், கொளச்சல் தொகுதியில் தங்கை கத்பெர்ட், விளவங்கோடு தொகுதியில் டி.டி. பிரவீண், கிள்ளியூரில் ராஜேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


banner

Related posts

பிரபல ரௌடி தொப்பை கணேசன் என்கவுண்டர் விவகாரம் | இரண்டு நாட்களுக்கு முன்பே போலீசாரால் பிடித்து செல்லப்பட்டாரா.? – திகில் கிளப்பும் உறவினர்கள்..

Ambalam News

விஜய் மீது நடவடிக்கை? நீலாங்கரை வீட்டில் குவிக்கப்பட்ட போலீஸ்! சென்னையில் பரபரப்பு

Ambalam News

தூய்மை பணியாளர்களின் ’மாநகராட்சியில் குடியேறும் போராட்டம்’ பணி பாதுகாப்பு வழங்குமா.? தமிழக அரசு – 9 வது நாளாக தொடரும் போராட்டம்

Ambalam News

Leave a Comment