சதி திட்டங்களை முறியடித்து.. தமிழக பெண்களுக்கு டபுள் ஜாக்பாட்.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு


தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு ஒரே நாளில் இரண்டு சர்ப்ரைஸ் அறிவிப்புகளை வெளியிட்டு சந்தசாத்தில் ஆழ்த்தியுள்ளார் அதுமட்டுமின்றி அடிமைக்கூட்டங்கள் போதும் சதி திட்டங்களை முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது, பீகார் பெண்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபாய் நிதியுதவித் திட்டம். இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பா.ஜ.க பக்கம் திருப்பியது.

பீகாரில் கிடைத்த இந்த வெற்றியின் பார்முலா தற்போது தமிழகத்திலும் எதிரொலிக்கப் போகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார். விரைவில் மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பீகாரைப் போலவே தமிழகப் பெண்களுக்கும் 10,000 ரூபாய் வழங்கும் புதிய திட்டத்தைப் பிரதமர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது.

இதன் மூலம் தமிழகப் பெண்களின் ஆதரவைப் பெற்று, பா.ஜ.க-வின் செல்வாக்கை மாநிலத்தில் நிலைநிறுத்துவதே பிரதமரின் நோக்கமாக உள்ளது. ஸ்டாலினின் அதிரடி வியூகம் மத்திய அரசின் இந்தத் திட்டத்தைப் பற்றிய ரகசியத் தகவல்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியவந்தன.

மேலும் திமுக அரசு மாதா மாதம் பெண்களுக்கு வழங்கி வரும் உரிமைத்தொகையை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க முயற்சிகள் எடுக்கும் தகவலும் கசிந்துள்ளது.

பா.ஜ.க-வின் இந்தத் திட்டத்தை எதிர்கொள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனே களத்தில் இறங்கி உள்ளார். மோடி மதுரையில் அறிவிப்பை வெளியிடும் முன்பே, தமிழக அரசின் சார்பில் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட அவர் திட்டமிட்ட மு. க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்தமிழ்ப்பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!, என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதுபோக புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


banner

Related posts

50 சீட் கேட்கும் பாஜக..!? அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி.? செங்கோட்டையனின் பகீர் அரசியல்.??

Ambalam News

கருணாநிதியை போன்று “மூச்சு உள்ளவரை நானே தலைவர்” – பாமக நிறுவனர் ராமதாஸ்

Admin

அதிமுகவில் உச்சமடைந்த கோஷ்டி மோதல் – போஸ்டர் யுத்தம்.. சாதி அரசியலால் தொண்டர்கள் வேதனை..

Ambalam News

Leave a Comment