திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக தலைமைக்கழக முதன்மைச் செயலாருமான, கே.என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் அவர்களின் 64 வது பிறந்தநாளை இன்று திருச்சி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
திமுகவினரால் எம்.டி என்றழைக்கப்படும் ராமஜெயத்தின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அவரது சகோதரரும் அமைச்சருமான கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த ராமஜெயத்தின் திருவுருவ படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின் போது, மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் திரு. கோவி.செழியன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. காடுவெட்டி தியாகராஜன் அவர்கள், திரு. ஸ்டாலின் குமார் அவர்கள், மாநகராட்சி மேயர் திரு. அன்பழகன் அவர்கள், ஆகியோருடன் கழக நிர்வாகிகள், மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டனர்.