மின்சாரம் துண்டிப்பு : தவெக தலைவர் விஜய்யின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து, ஆதாரத்தை வெளியிட்ட நாகை திமுக..


திமுக திருச்சி அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டத்தில் இன்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது, பேசிய விஜய், அரியலூரில் நான் பேசும்போது மின்சாரம் தடைபட்டது. திருச்சிக்கு சென்று நான் பேச ஆரம்பித்த பிறகு ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் தலைவரோ, பிரதமரோ, உள்துறை அமைச்சரோ இங்கு வந்துபேசும்போது இம்மாதிரி நிபந்தனைகளைப் போடுவீர்களா.? மின்சாரத்தை தடை செய்வீர்களா.? அப்படி கட் செய்துதான் பாருங்களேன். பேஸ்மெண்ட் ஆடிவிடாதா.? என்றுபேசினார்.

தனது பிரச்சாரத்தின் போது திட்டமிட்டே மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்கிற ரீதியில் பேசிய விஜய்யின் பேச்சை கண்டித்து நாகை திமுக எக்ஸ் பக்கத்தில், பதிலடி கொடுத்துள்ளது
நாகப்பட்டினம் தவெக மாவட்ட தலைவர், விஜய் தேர்தல் பரப்புரைக்கு வருவதால் மின் விபத்துகளை தடுக்கும் நோக்கில், மின்சாரத்தை துண்டிக்கும்படி மேற்பார்வை பொறியாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
நாகையில் பிரச்சாரத்தின் போது, மின் விபத்துகளை தடுக்கும் நோக்கில், மின்சாரத்தை துண்டிக்கும்படியும் விஜய் வரும் வழியில் மின்சாரத்தை துண்டிக்கும்படியும் அக்கடிதத்தில் கூறியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில், விஜய்யின் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக முதல்வர் மின்சாரத்தை துண்டிக்க கூறியது போல் பேசுவது கண்டிக்கதக்கது என்றும், இனி இவ்வாறு பேசினால் ஆதாரங்களை வெளியிட வேண்டியிருக்கும் என்கிற ரீதியில் நாகை திமுக சார்பில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பரிபாலன் கடித ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தவெக தலைவர் விஜய்யின் பேச்சை கண்டித்திருக்கிறார்.


banner

Related posts

வரலட்சுமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பதிற்கு ஆறுதல் கூறிய தொல்.திருமாவளவன்

Ambalam News

திருச்சி RTO தற்கொலை – பகீர் பின்னணி.. RTO மனைவியுடன் ஆணவ தற்கொலை.?

Ambalam News

பாஜக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ் டிடிவி தினகரன்.? பாஜகவின் அடுத்த மூவ்

Ambalam News

Leave a Comment