கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம், அரிசிகெரே தாலுகா ஜவகல் அருகே வாழை தோட்டத்தில் கடந்த 15-ந்தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக கிடக்கும் தகவல் அறிந்து, ஜவகல் போலீசார் விரைந்து சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், 45 வயதான அந்த பெண்ணை மர்மநபர் அவரை கொன்று உடலை வாழை தோட்டத்துக்குள் வீசியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த கொலை சம்பவம் குறித்து ஜவகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், கடந்த 15-ந்தேதி கொலையான பெண்ணும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுவனும் சண்டை போடுவதை பார்த்ததாக ஒருவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார், சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில், மகனைப்போல வளர்த்த பெண்ணை அந்த சிறுவன் காம இச்சையில் கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
கொலை செய்யப்பட்ட பெண் கணவரை இழந்து தனியாக வசித்து அந்த பெண் விவசாய கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகே வசிக்கும் குடும்பத்தினர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கின்றனர்.
அந்த வீட்டுக்கு உரிமையுடன் செல்லும் கொலை செய்யப்பட்ட பெண், அவர்களது வளர்ப்பு குழந்தையை அன்பும், பாசமும் காட்டி வளர்த்து வந்தார். தனது சொந்த மகனை போல நினைத்து அந்த குழந்தை மீது மிகுந்த அன்பு காட்டினார். அந்த சிறுவன் வளர்ந்த பிறகு அவனை பள்ளிக்கு அனுப்புவது, தேவையான உதவிகளை செய்வது உள்ளிட்டவற்றை தாய் அந்தஸ்தில் இருந்து அந்த பெண் செய்து வந்துள்ளார்.
ஆனால் அந்த சிறுவன், தாய் போல் அன்பு காட்டிய பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்துள்ளான். இந்த நிலையில்தான் கடந்த 15-ந்தேதி பக்கத்து கிராமத்தில் உள்ள வாழை தோட்டத்திற்கு அநாத பெண் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுவன், ஆட்கள் யாரும் இல்லாததை கவனித்து அந்த பெண்ணிடம் காம இச்சையை தீர்க்க முயன்றுள்ளான்.
மகனை போல நினைத்து வளர்த்தவன் தன்னிடம் தவறாக நடக்க முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண் அவனை கண்டித்து அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். ஆனாலும் அந்த சிறுவன், பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அப்போது கத்தி கூச்சலிட்ட அந்த பெண்ணை சரமாரியாக தாக்கி நிலைகுழைய செய்து, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்தது.
சிறுவனின் இந்த வாக்குமூலத்தை அடுத்து, போலீசார் சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பாலியல் பலாத்கார கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related posts
Click to comment