அதிமுகவில் உச்சமடைந்த கோஷ்டி மோதல் – போஸ்டர் யுத்தம்.. சாதி அரசியலால் தொண்டர்கள் வேதனை..



அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களாகவே, கட்சியில், புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. செங்கோட்டையனும் அதிமுகவின் நிகழ்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்தே வந்தார்.
இதனிடையே இன்று நேற்று தனது சொந்த தொகுதியான, கோபிச்செட்டிபாளையத்தில், செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ஒருங்கிணைந்த அதிமுகவை வலியுறுத்தி கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். “அ.தி.மு.க-விலிருந்து வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும்’’. எங்களது கோரிக்கையை மறுத்தால் என்னைப்போல் மனநிலை உள்ளவர்களை ஒன்றிணைத்து அதற்கான முயற்சியை மேற்கொள்வேன்” என்று கூறி, அதிமுகவால் ஒதுக்கிவைக்கப்பட்ட நீக்கப்பட்ட ஓ.பி.எஸ், டி.டி.வி, சசிகலா, டிடிவி.தினகரன் போன்றோர்க்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தேனியில் பிரச்சாரத்திற்காக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அதிமுக கொடிகளுடன் திடீரென அவரது வாகனத்தின் குறுக்கே வந்து மறித்த பெண்கள், மற்றும் இளைஞர்கள் “வேண்டும் வேண்டும் ஒருங்கிணைய வேண்டும்; நிற்போம் நிற்போம் ஓரணியில் நிற்போம்” என கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத அடுத்தகட்டமாக தென் மாவட்டங்களில், ‘’முக்குலத்தோரை வாஞ்சிக்கும் உங்களுக்கு தேவர் மண்ணில் என்ன வேலை’’ ‘’பழனிசாமியே தேவர் மண்ணில் கால் வைக்காதே’’ என்று தேவர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டடப்பட்டது.
இதற்கு பதிலடி தரும் விதமாக, தேனி பகுதியில், பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில், அதிமுக தொண்டர்கள், ‘’ஒற்றுமை வேடம் போடும் நரிகள் வேண்டாம்’’! “ நரிகளுக்கு என்ன வந்தது கேடு’’, ‘’உங்களுக்கு யார் விதிக்க முடியும் கெடு’’ ‘’அ.தி.மு.க-வில் அனைவரும் உங்களோடு. நீக்கள் மட்டும் போதும் தலைவா… நாங்க இருக்கோம்” ‘’கழகத்திற்காக உயிர் வருத்தி உழைக்கும் நீங்கள் மட்டும் போதும்!” என்ற பேனர்களை அதிமுக தொண்டர்கள் ஏந்தி நின்றனர்.
அதிமுக கோஷ்டி மோதலில், போஸ்டர் யுத்தம் தொடங்கி இருக்கிறது. மூத்த அதிமுக தொண்டர்கள் வேதனையடைந்துள்ளனர்.


banner

Related posts

வெளி மாநில மதுபாட்டிகள் காரில் கடத்தல் – காரை கைப்பற்றி போலீசார் விசாரணை

Ambalam News

விபச்சார விடுதி நடத்திய பாஜக நிர்வாகி கைது..

Ambalam News

திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

Ambalam News

Leave a Comment