இராமநாதபுரம் மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக இராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்து, விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் முனைப்புக்காட்டி வந்தது. தற்போது இரண்டு இடங்களை தெரிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இராமநாதபுரம் மாவட்டம் பல்வேறு சுற்றுலா தளங்களும் ஆன்மீக தளங்களும் நிறைந்த ஒரு பகுதியாக இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடிக்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வருபவர்கள் பெரும்பாலும் ரயில் அல்லது பேருந்துகளில் வருகின்றனர். தொலைதூரங்களில் இருந்து வருபவர்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக இராமேஸ்வரத்திற்கு பயணம் செய்கின்றனர். சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் பொருட்டு, இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. விமான நிலையம் அமைப்பதால், சுற்றுலாத்துறை மேம்படும் என்றும் இது பொருளாதார ரீதியாக அந்த மாவட்டத்தை வளர்க்கும் என கருதி, தமிழ்நாடு அரசு விமான நிலையம் அமைக்க முடிவெடுத்துள்ளது.
இதற்காக ராமேஸ்வரத்தில் விமான நிலையம் கட்டப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு மார்ச் மாதம் வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக தற்போது விமான நிலையத்தை அமைப்பதற்கான இரண்டு இடங்களை தமிழ்நாடு அரசு கண்டறிந்துள்ளது .
இதன் தொடர் நடவடிக்கையாக, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ ஐந்து இடங்களை தேர்வு செய்து அங்கே விமான நிலையம் அமைக்க தேவையான ஆய்வுகளை நடத்தி, தமிழ்நாடு அரசிடம் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து இடங்களில் இருந்து, இரண்டு இடங்களில் தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சிப்புளி மற்றும் கீழக்கரை பகுதிக்கு அருகே இருக்கக்கூடிய இரண்டு இடங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாம். முதலில் 700 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை விமான நிலையத்திற்காக அரசு கையகப்படுத்த வேண்டி இருந்த நிலையில், இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒன்று என முடிவு செய்யப்பட்டால் 500 இல் இருந்து 600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினாலே போதும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு இடங்களும் விமான நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான இடங்களாக இருந்தாலும் ராமேஸ்வரத்திற்கு அருகிலேயே ஏதேனும் இடம் இருக்கிறதா.? என கண்டறியும் பணியை டிட்கோ வாயிலாக தமிழக அரசு தொடர்வதாக தகவல்கள் வருகிறது.
இங்கு விமான நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டவுடன், தமிழக அரசு அரசு இந்திய கடற்படையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் தமிழ அரசால் விமானநிலையத்திற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு நடத்தி, இடத்தினை முடிவு செய்து அறிவிக்கும். இதனை அடுத்து இடத்தில் விமான நிலையம் எந்த இடத்தில் அமைகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். விரைவில் இராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது.
Related posts
Click to comment