தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 – தேமுதிக அறிவிப்பு


சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் மாநாடுகளை நடத்திவரும் நிலையில், தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா கொடியேற்றி வைத்து மாநாட்டை துவங்கி வைக்கப்போவதாக கட்சியின் தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தேமுதிகவின் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0’ வரும் 9.01.2026-ம் தேதி பிற்பகல் 02.45 மணியளவில் பத்மபூஷண் கேப்டன் விஜயகாந்த் திடலில் (வேப்பூர் அருகில்) கட்சிப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கலை நிகழ்ச்சியுடன் மாநாட்டை துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட தலைமைக் கழகம், மாநிலம், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழகம், மகளிர் அணியினர் மற்றும் கட்சத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு மாநாட்டை வெற்றியடைய செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் பிறந்த நாளான இன்று, தேமுதிகவின் மாநாடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருப்பது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

வாக்கு திருட்டு விவகாரம் : பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

Ambalam News

பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

Ambalam News

அஜீத்குமார் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

Ambalam News

Leave a Comment