தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பேசுகிறார் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு அனைத்து தரப்பில் இருந்தும் கிளம்மியிருக்கிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தனது சுதந்திர தின விழா செய்தியில், “சமீபத்திய ஆண்டுகளில், நமது மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், குறிப்பாக சிறார் (போக்ஸோ) பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது. அலுவல்பூர்வ தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் 56 சதவீத அளவுக்கு போக்ஸோ பாலியல் வல்லுறவு வழக்குகள் அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளன என்று பல புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார். மேலும் இவை ஒவ்வொன்றும் நம்மை முன்னேற விடாமல் பின்னுக்கு இழுத்து, வளமான மற்றும் வளர்ந்த மாநிலம் மற்றும் தேசமாக நாம் மாற வேண்டும் என்ற நமது கனவை சிதைக்கின்றன. இவற்றை தீவிரமாகவும் உடனடியாகவும் சரிசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து, கவர்னருக்கு பதிலளிக்கும் விதமாக, திமுக எம்.பி., கனிமொழி, தனது எக்ஸ் பக்கத்தில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Related posts
Click to comment