கொள்கை எதிரிகள், அரசியல் எதிரிகளை எதிர்த்து – ஜனநாயகப்போர்..! பாஜக – அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு தவெக விஜய் அறிக்கை.?



தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில், வருகின்ற 21ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணிகள் குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் பல கருத்துக்கள் உலவிக்கொண்டிருக்கிறது.
அதிமுக – பாஜக கூட்டணி பக்கம் தவெக சென்றுவிடும் என்ற அரசியல் யூகங்களின் அடிப்படையில் கூறப்பட்டு வரும் கருத்துகளுக்கு, மறைமுகமாக பதிலளிக்கும் வகையில், தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தவெகவின் அரசியல் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் விதமாக, தெளிவான அறிக்கை ஒன்றை விஜய் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையின் வாயிலாக அதிமுக – பாஜகவுடன் கூட்டணி கூட்டணி என்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளியை வைத்து முடித்து வைத்திருக்கிறார்.
தனது அறிக்கையில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்,
நம்மளோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களைத் தாண்டி வர்ரோம்.. இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள், வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்…
வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்ரோம்.. இந்த சுழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்…


முத்தமிழயும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும், சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப்போர்ல அவங்கள வென்று தமிழ்நாடு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உருது செய்யுறதுதான் இந்த மாநாடு.. அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, வாகை சுடும் வரலாறு திரும்புகிறது: வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன்வெச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்குறதுல ரொம்ப மிகிழ்ச்சி…என்று குறிப்பிட்டுள்ளார்.
2016 தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனித்து தேர்தலை சந்திக்கும் என்பதை அவரது அறிக்கை தெளிவுபடுத்துகிறது.


banner

Related posts

அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழி நடத்துவதில் என்ன தவறு.!? – எல். முருகன். நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை” – அதிமுக செல்லூர் ராஜு பதிலடி.!

Ambalam News

மதுரை மேயரின் கணவர் கைது – மேயர் ராஜினாமா?

Ambalam News

பாஜகவால் கழட்டி விடப்பட்ட ஒபிஎஸ்.. பின்னனியில் எடப்பாடி பழனிச்சாமி.?

Admin

Leave a Comment