இராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு – ஆட்சியரிடம் மனு
சென்னை பரந்தூர் விமானநிலைய நிலஎடுப்புக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் போராடி வருகின்றனர். தற்போது, இராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட கும்பரம், ராமன் வலசை, பூசாரி வலசை, தெற்கு வாணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இராமநாதபுரம் அருகே புதிய விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கும்பரம் கிராமம் உள்பட 3 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர்.