நெல்லை கவின் கொலை வழக்கில் அவரது காதலி என்று கூறப்படும் சுபாஷினி “கவின் கொலைக்கும், என் பெற்றோருக்கும் தொடர்பு இல்லை. உண்மை தெரியாமல் யாரும் பேசாதீர்கள்” என்று விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
திருநெல்வேலியில் சுர்ஜித் என்பவரால் பட்டியலின இளைஞர் கவின் என்பவர் கொலை செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு குடும்பத்துடன் சென்ற போது, சுர்ஜித் என்ற இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சுர்ஜித்தின் அக்காவுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகிய ஆத்திரத்தில், அவரை ஆணவக் கொலை செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு, உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணன் மற்றும் தாயார் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாக கவினின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கில் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், சுர்ஜித் உடன் சேர்த்து அவரின் பெற்றோர்களையும் கைது செய்ய கவினின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தினர். அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், கவின் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் கவின் காதலித்ததாக கூறப்படும் இளம்பெண் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில், எனக்கும் கவினுக்கும் என்ன நடந்தது என்பது பற்றி எங்கள் இருவருக்கும் தான் தெரியும். எங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி யாரும் பேச வேண்டாம். எங்கள் அப்பா அம்மாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவர்களை தண்டிக்க வேண்டும் என நினைப்பது தவறு. அவர்களை விட்டு விடுங்கள். இந்த சூழலில் என்னுடைய உணர்வுகளுக்கும், நான் என்ன நினைக்கிறேன் என்பதற்கும் மதிப்பளியுங்கள் என்று சுபாஷினி தெரிவித்திருக்கிறார்.
வீடியோவில் தனது காதல் குறித்து என் தந்தை கேட்டபோது, நான் கவினை காதலிக்கவில்லை என்று கூறிவிட்டேன் ஏனெனில், கவின் என்னிடம் நமது காதல் குறித்து தற்போது வீட்டில் கூறவேண்டாம் 6 மாதம் கழித்து சொல்லிக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார் அதானால் நான் எனது தந்தை கேட்டபோது காதலிக்கவில்லை என்று கூறினேன்.
ஆனால் எனது சகோதரன் சுர்ஜித் கவினிடம் என்ன பேசினான் என்று தெரியவில்லை.
சுர்ஜித் கவினிடம் என்னை பெண் கேட்டு, வீட்டிற்கு வரச்சொல்லி இருக்கிறான். எனது திருமணம் நடந்தால் தன் அவனது வாழ்க்கை குறித்து யோசிக்கமுடியும் என்று கவினிடம் சுர்ஜித் கூறுயிருந்ததாக சுபாஷினி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நான் கவினை 28 இம் தேதி வரச்சொல்லி இருந்தேன் கவின் 27 இம் தேதியே வந்துவிட்டார் .
அவர்களுக்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை இப்படி ஒரு விஷயம் நடந்து விட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
இதில் எனது பெற்றோருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
இது ஆணவக்கொலையா.? சுர்ஜித் பேச்சை மறுத்த காரணத்தால் நடந்த கொலையா.? இல்லை பெற்றோரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சுபாஷினி இவ்வாறு கூறுகிறாரா.? என்பது குறித்து வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
Related posts
Click to comment