மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளர் வாஞ்சிநாதன்.இவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வருகிறார். சமூக பிரச்னைகள், கூடங்குளம் அணு உலை, மனித உரிமை மீறல், காவல் நிலைய மரணங்கள், அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனம், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஆஜரானவர். பல்வேறு போராட்டங்களிலும் பங்கெடுத்து வருபவர்.
ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகர் ஆகியோரது அமர்வில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் வாஞ்சிநாதன் ஆஜராகி வந்தார். தற்போது வேறொரு வழக்கறிஞர் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக வேண்டுமென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்துள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகலில் வாஞ்சிநாதன் ஆஜரானபோது, “எனது தீர்ப்புகள் சாதிய ரீதியில் உள்ளதாக இன்னும் விமர்சிக்கிறீர்களா?” என வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் திடீரென நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஜாதி,மாத ரீதியாக செயல்படுவதாக உச்சநீதி மன்ற தலைமை நீதிபதிக்கு புகார்கடிதம் அனுப்பியுள்ள நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் கேள்வியால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக மதுரையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எடுத்துள்ள அவமதிப்பு நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகாரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரிக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற நீதிபதிகள் 10 பேர் ஆதரவாக உள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வாஞ்சிநாதன் அனுப்பிய கடிதத்தை கசிய விட்டது யார்.? நீதிபதி சுவாமிநாதன் ஜாதிய சார்புடன் நடப்பதாக தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகாரை கசிய விட்டது யார்.? புகார் அளிக்க கூட வழக்கறிருக்கு உரிமை இல்லையா.? நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜி.ஆர்.சுவாமிநாதன் எடுத்தது தவறு. இது தனிப்பட்ட வாஞ்சிநாதன் பிரச்சனை அல்ல.
தன் மீதான புகாரை நீதிபதி சுவாமிநாதனே விசாரிப்பது அநீதியானது. நீதிபதி சுவாமிநாதன் விசாரிப்பதை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலையிட்டு தடை செய்ய வேண்டும். நீதிபதி சுவாமிநாதன் நடவடிக்கையை 99% வழக்கறிஞர்கள் எதிர்க்கிறார்கள். நீதிபதி சுவாமிநாதன் ஜாதி, மத ரீதியாக செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி உள்ளனர் என்று கூறினார்.
இந்த பிரச்னையால் நீதித்துறைக்குள் சாதி, மத, ரீதியான போக்கு இருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் கருத்து தெரிவிக்கின்றனர்.
அம்பலம் செய்திப்பிரிவு