கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை நடத்திய மதுரை மாவட்ட நீதிபதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனது விசாரணை அறிக்கையை இன்று தாக்கல் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜீத்குமார் அடித்து கொல்லப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் அவர்களை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இன்று அவர் தனது அறிக்கையை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்கிறார்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இன்று வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.