நகையை கொள்ளை அடிக்க இரட்டை கொலை– ஈரோட்டில் பயங்கரம்


.2020-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுகளில் ஈரோடு மாவட்டம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரசலூர் பகுதிகளில் நகைக்காக தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வயதான தம்பதியினர் நாகைக்காக கொலை செய்யப்பட்டிருகிக்கின்றனர்.
மாவட்டத்தில் ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65). இவகளை நகை மற்றும் பணத்திர்க்காக கொலை செய்துள்ளனர். இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் மக்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் விலாங்காட்டு வலசு பகுதியில் வசித்து வருவதுடன் ஆடு மாடுகளை வளர்த்துடன் விவசாயமும் செய்தும் வந்திருக்கிறார்.
இந்த சூழலில், மகன் கவிசங்கர் அலைபேசி மூலம் அழைத்தும் தந்தை எடுக்காததால், அருகில் உள்ள தன் உறவினர்கள் மூலமாக வீட்டிற்குச் சென்று பார்க்கச் சொல்லி கூறியிருக்கிறார். வீட்டிற்கு சென்று பார்க்கச் சென்றவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், சந்தேகமடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்..

விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில், கணவன், மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டதும் வீட்டில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனதும் தெரியவந்துள்ளது.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் பிரிவினர், கைரேகை நிபுணர்கள் தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரிக்கும் பணி நடைபெற்றது. 8 தனிப் படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.இந்த கொலைச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் அமெரிக்க டாலர் மதிப்பு சரிந்தது.. ஜப்பானின் கரன்சியான ‘யென்’ அமெரிக்க டாலரை முந்தியது

Ambalam News

முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபடியே நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

Admin

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ்க்கு மீண்டும் திருமணம்

Ambalam News

Leave a Comment