காவல் ஆய்வாளருக்கு 2 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்


புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி ஊரை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர் மோசடியில் 13 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதன் காரணமாக தனது பெற்றோருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையம் சென்று உதவி காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், மூன்று பணப்பரிவர்த்தனைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து நடத்தப்பட்டுள்ளதால், காவல் ஆய்வாளர் அனுமதி இல்லாமல் இந்த புகாரை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.

மீண்டும் அவர்கள் காவல்நிலையம் சென்று காவல் ஆய்வாளருக்காக பல மணிநேரம் காத்திருந்த பிறகு, காவல் ஆய்வாளர் வந்து, புகாரை ஏற்க முடியாது என்று கூறி, மனுதாரரின் தாயையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட புகாரை தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து, மனுதாரருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக உள்துறை கூடுதல் முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

இந்தத் தொகையை ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் ஆய்வாளரிடமிருந்து வசூலித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கியது. இந்நிலையில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவையும், அதனை உறுதி செய்த சென்னை உயர்நீதின்ற உத்தரவையும் எதிர்த்து காவல் ஆய்வாளர் பவுல் யேசுதாசன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவு தொடர்பான இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரூ.13 லட்சத்தை ஏமாந்தவர் அது தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வந்தபோது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தது மற்றும் தன்னை தரக்குறைவாக நடத்தியதை எதிர்த்த வழக்கில், தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம், தொடர்புடைய காவல்துறை ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சத்தை அபராதமாகப் பிடித்து அதனை சம்பந்தப்பட்டவருக்கு அளிக்குமாறு தமிழக அரசுக்கு  உத்தரவிடப்பட்டிருந்த உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம் குற்றச்சம்பவம் தொடர்பாக புகார் அளிக்க காவல்நிலையம் வருபவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21- ன்படி இந்திய குடிமகனின் அடிப்படை உரிமையாகும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்ததுடன், மனுதாரரின் தாயை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளீர்கள்.

இது மனித உரிமைகளுக்கு எதிரானது. மனித உரிமைகள் சட்டப் பிரிவு 2(1)(டி) மனித உரிமைகளை ஒரு தனிநபரின் வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் தொடர்பான உரிமைகள், அரசியலமைப்பால் அல்லது சர்வதேச உடன்படிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட மற்றும் இந்தியாவில் நீதிமன்றங்களால் செயல்படுத்தக்கூடிய வகையில் உறுதி செய்யப்படுகிறது என்று வரையறுக்கிறது.

இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்ததே அதிர்ச்சியளிக்கிறது. புகார் அளிக்க வருவோருக்கு குறைந்தபட்சம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ஆனால் காவல் துணை ஆய்வாளர் எஃப்ஐஆர் பதிவு செய்யாமல் மேலதிகாரியிடம் அனுப்பியிருக்கிறார்

அவரும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் மனுதாரரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். எனவே, இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையமோ, சென்னை உயர்நீதிமன்றமோ தவறான தீர்ப்பை அளிக்கவில்லை என்று முடிவுக்கு வருகிறோம்.

மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, இங்கே மேல்முறையீடு செய்திருக்கும் மனுதாரரின் நடத்தையை ஆராய்ந்ததில், மனுதாரரின் தரப்பில் மனித உரிமை மீறல் இருப்பதாக ஆணையமும் உயர்நீதிமன்றமும் சரியாக கண்டறிந்தனர் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


banner

Related posts

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் – தமிழகத்திற்கு 15,516 கோடி முதலீடுகள் – 17,613 வேலைவாய்ப்புகள்..

Ambalam News

இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்..

Ambalam News

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் – கையும் களவுமாக சிக்கிய விஏஓ கைது

Admin

Leave a Comment