தேநீரில் மயக்க மருந்து.. 13 வயது சிறுமி பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது


கணவன் மனகிவி இடையே ஏற்பட்ட சண்டைக்கு இடையே 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டிருப்பது திருப்பூர் மாவட்டத்தை உலுக்கியிருக்கிறது.
திருப்பூர் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில், கணவன் மனைவி இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கணவன் வீட்டை விட்டு சென்று விட்டார். இதற்கிடையே மனம் உடைந்த மனைவி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில், அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அப்பகுதியினர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் வீட்டில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மகள் தனியாக இருந்துள்ளார்.
அப்போது பூமலூரை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி பாலமுருகன் சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். சிறுமிக்கு ஆறுதல் கூறுவது போல ஏமாற்றி, தேநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்ததும் மயங்கி விழுந்த சிறுமியை அவர் தனது வீட்டுக்கு தூக்கி சென்று, மயக்க நிலையில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மயக்கத்தில் இருந்த சிறுமிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண்விழித்து தனது வீட்டிற்கு வந்த சிறுமிக்கு, மறுநாள் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
இந்நிலையில், தற்கொலைக்கு முயன்று திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியின் தாயார் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரிடம் வயிற்று வலி குறித்து சிறுமி தெரிவித்துள்ளார். உடனே அவர் சிறுமியை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், திருப்பூர் கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு வந்து சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, பாலமுருகன் கொடுத்த நேநீரை அருந்தியதும், தனக்கு தலை சுற்றல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்தனர். 13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


banner

Related posts

எடப்பாடி முதுகில் குத்தி விட்டதாக நான் சொல்லவில்லை.. ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறது – பிரமலதா விஜயகாந்த்

Ambalam News

2, 3 நாட்களில் வீடு திரும்புவார் முதல்வர் – மு.க.அழகிரி பேட்டி..?

Admin

‘’உங்களுக்காகவே குரல் கொடுக்க’’ ‘’உங்க விஜய் நா வாரேன்’’ தொடங்கியது விஜய்யின் தேர்தல் பிரச்சாரம்..

Ambalam News

Leave a Comment