ஏர்போர்ட் மூர்த்தியை சென்னையில் டிஜிபி அலுவலக வாயிலில் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தியை சென்னையில் டிஜிபி அலுவலக வாயில் அருகே மர்ம மனிதர்கள் தாக்கியதோடு செருப்பால் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் தாக்கி உள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி டிஜிபி அலுவலகத்தில் பாமகவினர் மனு அளிக்க சிலர் வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புரட்சி தமிழகம் கட்சியை நடத்தி வரும், ஏர்போர்ட் மூர்த்தி அங்கு வந்திருகிக்கிறார்.
அப்போது, டிஜிபி அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் இருக்கும் நிலையிலேயே, 4 பேர் கொண்ட கும்பல் எதிர்பாராத விதமாக ஏர்போர்ட் மூர்த்தியை சரமாரியாக தாக்கி உள்ளது. அதில் ஒரு நபர் தகாத வார்த்தைகளை பேசியபடி, தனது செருப்பை கழற்றி அடித்து தாக்கியது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குளாக்கியது. கூட்டம் கூடுவதை அறிந்த, அடுத்த சில நிமிடங்களில் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து ஓடி தப்பிச் சென்றனர்.
ஏர்போர்ட் மூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாக சில கருத்துகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, அதனால் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏர்போர்ட் மூர்த்தியின் மீதான, இந்த கொடுமையான, கண்டிக்கத் தக்க தாக்குதல் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குழைந்து வருவதாகவும் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்