தவெக ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்கள் || ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் தமிழக பஜாக தலைவர் நயினார் நாகேந்திரன் புகார்..


தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனிநபர்களான திரு. ஜான் ஆரோக்கியசாமி மற்றும் திரு. விஷ்ணு ரெட்டி அவர்கள் பங்கேற்றது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பி விவாதத்திற்குள்ளானது. இதுகுறித்து பலரும் நடவடிக்கை கோரினார்.

அதேபோல, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் தவெக அமைச்சரவையில் பதவி வகிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பி. விஸ்வநாதன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இது குறித்து நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை என்ற குற்றச்சாட்டு தொடந்து வந்தது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக ஆளுநரை சந்தித்து தவெக அரசு மீது புகாரளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்..

சென்னை கிண்டியில் அமைந்துள்ள மக்கள் பவனத்தில், மேதகு தமிழக ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை சந்தித்து தவெக ( @TVKVijayHQ )ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்களைக் குறித்து புகார் அளித்தோம்.

குறிப்பாக, கடந்த ஜூன் 21-ஆம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் காங்கிரஸ் கட்சியைச் ( @INCTamilNadu ) சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பி. விஸ்வநாதன் (@Viswanathan_INC )அவர்கள் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதனைக் குறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கோரி மேதகு ஆளுநர்(@lokbhavan_tn) அவர்களிடம் மனு வழங்கினோம்.

மேலும், கடந்த ஜூன் 5-ஆம் தேதி நடைபெற்ற தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனிநபர்களான திரு. ஜான் ஆரோக்கியசாமி மற்றும் திரு. விஷ்ணு ரெட்டி அவர்கள் பங்கேற்றதாக எழுந்துள்ள புகாரைக் கருத்தில் கொண்டு, அதனைக் குறித்தும் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டி தனி மனுவொன்றையும் ஆளுநர் அவர்களிடம் சமர்ப்பித்தோம்.

மாநில நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை நிலைநிறுத்தும் வகையில், இந்த இரண்டு மனுக்களிலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மீது நியாயமான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என நம்புகிறோம்.

இச்சந்திப்பில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளரும், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான திரு. @MenonArvindBJP அவர்களும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் திரு. @narayanantbjp அவர்களும் உடனிருந்தனர் என்று குறிப்பித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பும் இதை உறுதி செய்துள்ளது. ஆளுநர் மதுரையில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநரை தவெகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வரும் சூழலில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்.? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது


banner

Related posts

நியாயமான – சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்..

Ambalam News

காவல் ஆய்வாளருக்கு 2 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம்

Admin

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் | திமுக v/s அதிமுக.. சதுப்புநில பகுதியை சுற்றி குடியிருப்புகள் கட்ட தடை விதிக்க கோரிய அதிமுக மனு தள்ளுபடி

Ambalam News

Leave a Comment