எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு.! பின்னணியில்.. அதிமுக – தவெக – பாஜக.. திமுகவினர் குற்றச்சாட்டு..


தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான வேட்பு மனு தாக்கல் அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை நடைபெற்றது. காலை முதலே வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைப்பு, வேட்பு மனு ஏற்பு என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வந்தது. திருத்தம் செய்ய வேண்டிய ஆவணங்களை கொண்டு வருவதாக கூறி சென்ற அருண்குமார் மாயமானர். இந்த நிலையில், எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அருண்குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. தவெக வேட்பாளரின் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பத்திருந்த அவரது மனைவி நித்தியாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தவெக வேட்பாளர் வேண்டுமென்றே செயல்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.

தவெக சார்பில் எடப்பாடி தொகுதியில் களமிறங்கிய வேட்பாளர் அருண்குமார் மனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் திட்டமிட்டு நடத்தப்பட்ட செட்டிங் என்கின்றனர் உடன்பிறப்புகள் கவுன்சிலராக இருந்தவருக்கு வேட்புமனு நிரப்புவதில் எப்படி இவ்வளவு கேர்லெஸ்ஸாக இருப்பார்,? அருண்குமார் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளராக வலம் வந்தவர். எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவோடு உள்ளாட்சித் தேர்தலில் சீட் வாங்கி, அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராகப் பதவி வகித்தவர். 2026 சட்டமன்ற தேர்தல் அறிவித்த பின்னர் அவசர அவசரமாக தவெகவில் இணைந்தார். எடப்பாடி தொகுதியில் அவருக்கு சீட் கிடைத்தற்கு பின்னணியில் அதிமுகவின் அரசியல் வியூகம் இருக்கிறது. இதற்கு பின்னணியில் பாஜக காய் நகர்த்தி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தவெக விஜய் ஆகிய இருவரின் வெற்றியை உறுதி செய்யும் விதமாக இந்த வியூகம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெரம்பூரில் தொகுதியில் விஜய் போட்டியிடும் நிலையில், அதிமுக தரப்பில் வேட்பாளரை நிறுத்தாமல் அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய போதே எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதன் பின்னணியில் ஏதோ ஒரு நாடகம் இருப்பதாகவே நாங்கள் சந்தேகித்தோம். அந்த சந்தேகம் தற்போது உறுதியாகியிருக்கிறது. பாஜக டெல்லி மேலிட அறிவுத்தளின் படி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துள்ளனர்.

தற்போது, எடப்பாடி தொகுதியில் அதிமுகவுக்கு ரூட்டை க்ளியர் செய்துள்ள தவெகவிற்கு அதற்கு முன்னதாகவே அதிமுக வலுவாக இருக்கும் பெரம்பூர் தொகுதியை, சற்றும் தொடர்பில்லாத பாமகவிற்குத் தூக்கிக் கொடுத்து, அந்தத் தொகுதியை வலுவிழக்கச் செய்து, விஜய்யை வெற்றி பெற செய்வதே இவர்களுக்குள்ளான மறைமுக ஒப்பந்தம். அங்கு தவெகவிற்கு வாக்குகள் எளிதாக விழுவதற்கு வழிவகை செய்வதுள்ளது அதிமுக. சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய்க்கு ரூட்டை க்ளியர் செய்து கொடுத்து, எடப்பாடி தொகுதியை க்ளியர் செய்து கொண்டிருக்கிறது அதிமுக என்கின்றனர் உடன்பிறப்புகள்.

இது முழுக்க முழுக்க அதிமுக – தவெக – பாஜக காட்சிகள் ஆடிய அரசியல் சதுரங்க ஆட்டம். ஆனால் இதெற்கெல்லாம் திமுக சளைத்து விடாது. எடப்பாடி தொகுதியில் முன்பை விட தீவிரமாக களமாடுவோம் என்கின்றனர் திமுகவினர்.


banner

Related posts

இராமேஸ்வரத்தில் விரைவில் ஏர்போர்ட்..

Ambalam News

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்..

Admin

புதுமை பெண் திட்டம் | மாணவி சொன்ன நிஜ கதை.. கண்ணிர்விட்டு அழுத உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

Ambalam News

Leave a Comment