அண்ணாமலை போட்டி.? |அதிமுகவிடம் 5 தொகுதிகளை மாற்றி கேட்கும் பாஜக.. யோசிக்கும் எடப்பாடி பழனிச்சாமி .. கலக்கத்தில் அதிமுக வேட்பாளர்கள்.?


2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இந்நிலையில், அதிமுகவிடம் அண்ணாமலை, கே. டி ராகவன் உள்ளிட்ட சில நிர்வாகிகளுக்காக 5 தொகுதிகளை மாற்றி தரும்படி பாஜக கோரிக்கை வைத்துள்ளது. பாஜக சார்பில் அண்ணாமலை, கேடி ராகவன் உள்பட சில முக்கிய தலைவர்களுக்காக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு மொத்தம் 27 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை பாஜக சார்பில் கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுவதை தடுக்கும் வகையில், வேண்டுமென்றே எடப்பாடி பழனிச்சாமி தொகுதிகளை ஒதுக்கி உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளை குறிவைத்து காத்திருந்த நிலையில், அண்ணாமலை மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எடப்பாடி பழனிச்சாமி அந்த தொகுதிகளை ஒதுக்காமல் வேறு தொகுதிகளை ஒதுக்கி அண்ணாமலையை பழிவாங்கிவிட்டதாக உறப்பட்டு வந்தது.

மேலும், பாஜக பலமாக இருப்பதாக பாஜகவினாரால் குறிப்பிடப்படும் சென்னை, கோவையில் தலா ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பாஜக தொண்டர்கள் அப்செட்டாகி உள்ளனர்.

இதன் காரணமாக, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை என்று மேலிட தலைவர்களிடம் கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதன்காரணமாக பல இடங்களில் பாஜக தொண்டர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் தி நகர், கோவையில் கிணத்துக்கடவு, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி தொகுதிகளை பாஜக பெற வேண்டும் என்று அவர்கள் போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 5 தொகுதிகளை மாற்ற கோரிக்கை இந்நிலையில் தான் பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, கே வசந்தராஜன், எம் வெங்கடேசன், கேடி ராகவன், உள்ளிட்டவர்களை தேர்தலில் களமிறக்கும் வகையில் பாஜக 5 தொகுதிகளை மாற்றி தரும்படி அதிமுகவிடம் கேட்பதாக கூறப்படுகிறது. இவர்கள் போட்டியிட்டால் வெற்றி பெறுவார்கள் என்றுகூறி அதிமுகவிடம் பாஜக தலைவர்கள் பேசிதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக மொத்தம் 167 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 3 கட்டங்களாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆனால் கூட்டணி கட்சியான பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காத்திருக்கிறது. அதிமுகவின் பதிலுக்காக பாஜக தலைமை காத்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்பது ஒருபுறமிருக்க, பாஜக குறிப்பிடும் தொகுதிக்கான அதிமுக வேட்பாளர்கள் நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர். அண்ணாமலை போட்டியிடுவாரா.?அதிமுக விட்டுக் கொடுக்குமா.? என்பது அதிமுக பாஜக தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது


banner

Related posts

கொளத்தூர் இளம்பெண் கொலை – பகீர் பின்னணி..

Admin

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்சநீதி மன்றம் அதிரடி

Ambalam News

சிறுமிக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு கைது.. சிறுமியின் தாயும் உடந்தை

Ambalam News

Leave a Comment