தவெக விஜய்க்கு சிபிஐ சம்மன் | விரைவில் ஆஜராக உத்தரவு.? பின்னணி என்ன.?


கரூர் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. ஜனவரி 12ம் தேதி டெல்லியில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னதாக தவெக வின் முக்கிய நிர்வாகிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டிய அஜித்குமார், முக்கிய சாட்சியாக சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சிபிஐ அதிகாரிகள், சம்பவம் நடந்த நாளில் நடந்த நிகழ்வுகள் குறித்து அஜித்குமாரிடம் விரிவாகக் கேள்வி கேட்டுள்ளனர். அன்றைய தினத்திற்கான திட்டம் என்ன.? கரூருக்கு பயணிக்க டிரைவருக்கு எப்போது அறிவுறுத்தப்பட்டது.? வாகனம் சம்பவ இடத்தை எப்போது அடைந்தது.? காவல்துறை அவருக்கு ஏதேனும் வழிமுறைகளை வழங்கியதா.? பிரச்சார வாகனத்தை கூட்டத்திற்குள் ஓட்டச் சொன்னது யார்.?சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது குறித்தும் சிபிஐ கேள்வி எழுப்பி உள்ளனர்.

அந்த நேரத்தில் விஜய் என்ன செய்து கொண்டிருந்தார், அவருக்கு நிலைமை தெரிந்ததா, சூழ்நிலை மோசமாக இருந்தபோதிலும் ஏன் பேச்சு தொடர்ந்தது என்றும் அஜித்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. வாகனத்திற்கு முன்னால் நடந்த சம்பவம் குறித்து விஜய்க்கு யார் தகவல் தெரிவித்தனர் என்பதை அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அதிகாரிகளின் இது போன்ற கேள்விகளுக்கு வாகன ஓட்டுனர் அஜித் குமார் விஜய்க்கு எதிராக சாட்சி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விஜய்க்கு சிக்கலை ஏற்படும் சில பதில்களை அவர் சிபிஐ விசாரணையில் கூறியதாக தெரிகிறது. கூடுதலாக, அஜித்குமாரும் விஜய் தவிர, சம்பவம் நடந்தபோது வாகனத்திற்குள் யார்.? யார்.? இருந்தார்கள் என்று அடையாளம் காட்ட முடியுமா.? என்று அஜித்குமாரிடம் கேட்கப்பட்டு உள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் தலையீடு மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்து விசாரணையில் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த விசாரணையில் அஜீத்குமாரிடம் கேட்டக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலின் அடிப்படையில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

மேலும் “விஜய் ‘ஜனநாயகன்” நிகழ்ச்சி உள்பட அனைத்து சினிமா நிகழ்ச்சிகளுக்கும் குறித்த நேரத்தில் வந்துள்ளார். மலேசியா ஜனநாயகன் நிகழ்ச்சிக்கு கூட முதல்நாளே சென்றுள்ளார். மேலும் விஜய் தனது படப்பிடிப்புகளுக்கும் ஒருபோதும் தாமதமாக வந்தது கிடையாது. “ஆனால், ஏன் அரசியல் கூட்டங்களுக்கு மட்டும் ஏன் தாமதமாக வருகிறார்? அதிக கூட்டத்தைக் கூட்டி காட்டுவதற்காக இதை வேண்டுமென்றே இது போல செயல்படுகிறாரா.? கரூர் சம்பவத்திலும் இதுதான் நடந்ததா?” என விசாரணை அதிகாரிகள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.


banner

Related posts

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டையில் குற்றவாளி கைது

Admin

மெக்டொனால்ட்ஸ் பர்கரில் நெளிந்த புழுக்கள் வாடிக்கையாளர் அதிர்ச்சி.. என்ன செய்கிறது உணவு பாதுகாப்பு துறை

Admin

அதிமுக உட்கட்சி விவகாரம்: நெருக்கடியில் எடப்பாடி பழனிச்சாமி.!? மான் வேட்டை சிக்கும் திமுக வி.ஐ.பி.? விசாரணை வலையத்தில் அண்ணாமலை.?

Ambalam News

Leave a Comment