திமுக – தவெகவுடன் யாருடன் கூட்டணி.? AIADMTUMK கூட்டத்தில் ஓபிஎஸ் கொடுத்த ஆப்ஷன்.! எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கொந்தளித்த நிர்வாகிகள்..


எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சிகளை மொத்தமாக நிராகரித்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் நிர்வாகிகள் உடன் நேற்று ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் பல விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நாம் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது.

இதில் ஓபிஎஸ் சார்பாக இரண்டு ஆப்ஷன் கொடுத்து மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுகவில் மீண்டும் இணையலாமா?அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாமா? அல்லது தவெக உடன் கூட்டணி வைக்கலாமா? திமுக உடன் கூட்டணி வைக்கலாமா? என்று ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக உடன் இனி இணைய முயற்சிக்க வேண்டாம். அவர் இறங்கி வருவது போல தெரியவில்லை. இனி அதிமுக உடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் சார்பாக கருத்து கேட்கப்பட்டது. இதில் இரண்டு ஆப்ஷன் கொடுத்து கருத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக திமுக என்று இரண்டு ஆப்ஷன் கொடுத்து கேள்வி கேட்கப்பட்டது. இரு ஆப்ஷன்களை கொடுத்து மாவட்ட செயலாளர்களின் கருத்துக்கள் பெறப்பட்டது. இதில் பெரும்பாலான நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி வைக்கவே அதிகளவில் விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றத் தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் பெரும்பாலான நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சிகளை நிராகரித்த எடப்பாடி கே. பழனிசாமிக்கு பாடம் புகட்ட நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வத்திடம் திட்டவட்டமாக தெரிவித்தாக கூறப்படுகிறது.

சில நிர்வாகிகள் மட்டுமே தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அனைத்து தரப்பு நிர்வாகிகளின் கருத்தை கேட்டறிந்த ஓ. பன்னீர்செல்வம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” பொங்கல் முடியும் வரை நாம் முடிவு எடுக்க வேண்டாம். அதன் பின் முடிவு எடுக்கலாம் என்று நிர்வாகிகளிடம் தெரிவித்து தனது முடிவைத் தள்ளிப் போட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகி ஆர். வைத்திலிங்கம், பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை அதிமுகவுடன் எந்தவிதமான இணைப்புக்கும் சாத்தியமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். “இனி பழனிசாமியைத் தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்” என்று கூறியுள்ளார்.

இறுதியாக பேசிய பன்னீர்செல்வம், 2024 மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், 14 தொகுதிகளில் (அதாவது 126 சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வி) மூன்றாவது இடத்தைப் பிடித்தது எனக் குறிப்பிட்டு, அதிமுகவிற்கு இத்தகைய அவமானத்தைக் கொண்டு வந்த பழனிசாமிக்கு நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று தொண்டர்களின் உற்சாக கரவொலிக்கு மத்தியில் பன்னீர்செல்வம் மேலும் தெரிவித்தார். பொங்கலுக்கு பின் திமுக உடன் கூட்டணியா.? அல்லது தவெக உடன் கூட்டணியா.? என்பதை ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பார் என்கின்றனர் நிர்வாகிகள்.

பனையூருக்கு செல்வாரா.? அண்ணா அறிவாலயம் செல்வாரா.? என்ற கேள்விகக்கு பனையூர் பக்கம் செல்லவே வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் கிசுகிசுக்கின்றனர்.


banner

Related posts

ரூ.38.50 கோடி குத்தகை பாக்கி | எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது சுற்றுலாத்துறை

Ambalam News

மாநிலங்களவை எம்.பி பதவியேற்கும் கமல்ஹாசன்மற்றும் திமுக உறுப்பினர்கள்.!

Admin

போதைப் பொருள் கடத்தல் | போதைபொருளை உன் குழந்தைக்கு கொடுப்பியா.? எஸ். பி. அதிரடி

Ambalam News

Leave a Comment