கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் அவர்கள் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 33 க்கும் பேர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யை பார்க்க கூட்டம் குவிந்த நிலையில் மிகப்பெரிய கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். கரூர் அமராவதி தனியார் மருத்துவமனைகள் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது, கரூரிலுள்ள மேலும் 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் 50பேர் நிலமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. சம்பவ இடத்திற்கு திருச்சி மத்திய மண்டல தலைவர் நிர்மல் குமார் ஜோஷி, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வருகை தந்திருக்கிறார்.

இதனிடையே கரூர் அரசு மருத்துவமனையில் தேவையான வசதிகளை தயார் நிலையில் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பக்கத்து மாவட்ட ஆட்சியர்கள் .மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் விரைந்துள்ளனர். மிகவும் பதற்றமான நிலை கரூரில் ஏற்பட்டுள்ளது. எங்கு திரும்பினாலும் அழுகை குரல்களை காண முடிகிறது. மக்கள் காயத்துடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி,
முன்னாள் அமைச்சர் @V_Senthilbalaji, மாண்புமிகு அமைச்சர் @Subramanian_Ma அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவ உதவிகளை முன்னின்று செய்து வருவதாக கூறப்படுகிறது.
புகைப்படம் நன்றி – SPARK MEDIA