லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா | 20,000 ஆயிரம் லஞ்சம் கேட்டு கையும் களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ கைது


வீட்டுமனைப் பட்டா மாறுதல் செய்வதற்காக விவசாயி ஒருவரிடம் ரூ.20,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, விழுப்புரம் மாவட்டம் சாலையகரம் கிராம நிர்வாக அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். சமீபத்தில் விஏ. ஓ புன்னைவனம் என்பவர் 3000 லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 55), இவர் ஒரு விவசாயி. இவர் செப்.3-ஆம் தேதி தனது மகள் அருள்பிரபாவுக்காக சாலையகரம் கண்ணப்பன் நகரில் 2 ஆயிரத்து 370 சதுர அடி பரப்பளவில் வீட்டுமனை ஒன்றை வாங்கினார். அந்த வீட்டுமனைக்குப் பட்டா மாறுதல் செய்வதற்காக, சாலையகரம் கிராம நிர்வாக அலுவலரான மேல்காரணையைச் சேர்ந்த சதீஷ் என்பவரை அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு அணுகினார். அப்போது ரூ.30,000 பணம் கொடுத்தால்தான் பட்டா வழங்குவேன் என்று கறாராக லஞ்சம் கேட்டிருக்கிறார் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அண்ணாமலை, தன்னால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை என்று குறியிருக்கிறார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், ரூ.10,000 குறைத்துக்கொண்டு ரூ.20,000 லஞ்சமாக கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அண்ணாமலை, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார்.

விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, ரசாயனப் பொடி தடவிய பணத்தை நேற்று காலை அண்ணாமலை எடுத்துக்கொண்டு சாலையகரம் கிராமத்திற்கு சென்றார். அங்கு அவர் சதீஷைத் தொடர்பு கொண்டபோது, கோலியனூர் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வரும்படி கூறியிருக்கிறார். மேலும் பணத்தை எடுத்துக் கொண்டு வரும்படியும் கூறியுள்ளார். அதன்படி, அண்ணாமலை லஞ்சப் பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கிருந்த சதீஷிடம் கொடுத்தார். அந்தப் பணத்தை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு அழகேசன், இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மதன்மோகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சதீஷை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரை சாலையகரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதுடன், சில ஆவணங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து சதீஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்தனர்.

வருவாய் துறை அதிகாரிகளின் ஊழல் போக்கு உச்சமடைந்திருக்கும் நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டாட்சியர் அலுவலகங்களில் திடீராய்வு மேற்கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.


banner

Related posts

திமுக வுக்கு அடுத்த தலைவலி ஸ்டார்ட்.. வனத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் மர்ம மரணம்..

Ambalam News

விஜய் தேவரககொண்டாவின் கிங்டம் படத்திற்கு வைகோ கண்டனம்

Ambalam News

தமிழக அரசியல் தலைவர்கள் தேர்தலுக்காக நடக்காத விஷயங்களை கூறுவார்கள்.!? விஜய் பேச்சை பெரிதுபடுத்த வேண்டியதில்லை – இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜத ஹேரத்

Ambalam News

Leave a Comment